சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் சீனாவின் வாங் ஜி யீயை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பி.வி.சிந்து கைப்பற்றினார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி அந்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ஜப்பானின் சயனா கபவாகாமியை எதிர்கொண்ட பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று (ஜூலை 17) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து – சீனாவின் வாங் ஜி யீயை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் தங்க மங்கை பி.வி.சிந்து 21-9, 11-21, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் வாங் ஜி யீயை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரை பிவி சிந்து முதன்முறையாக வென்றுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன் 2010-ம் ஆண்டு சாய்னா நேவால் இத்தொடரை வென்றார்.