பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனோல்டோவுக்கு மது, புகைபிடிக்கும் பழக்கங்கள் எதுவும் கிடையாது. தற்போது, 39 வயதானாலும் உடலை 22 வயது இளைஞர் போல கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார். இதன் ரகசியம் என்ன தெரியுமா?
காலையில் எழுந்ததும் இரு பெரிய தம்ளர்களில் தண்ணீர் அருந்துவதுதான் அவரின் ஃபிட்னெஸ்சுக்கு காரணம் என்று Journee mondiale.com என்கிற இணையதளத்தில் சொல்லப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 லிட்டர் தண்ணீரை அவர் அருந்தி விடுவாராம். பயிற்சிக்கு சென்றாலும் மற்ற வீரர்கள் செயற்கை குளிர்பானங்கள், ஸ்போர்ட்ஸ் டிரிங்ஸ்களை அருந்தினாலும் ரொனால்டோ தண்ணீரை தவிர வேறு எதையும் அருந்த மாட்டார். அதேபோல, டீம் டின்னருக்கு சென்றாலும் பீர், மது அந்த மாதிரி எதையும் அவர் டச் செய்வதில்லை. எப்போதுமே தண்ணீர் மட்டும்தான் அவரது முதல் சாய்சாக இருக்கும்.
கடந்த 2020 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் போது, ஒரு போட்டிக்கு முன்னதாக ரொனால்டோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மேஜையில் இரு கோக் பாட்டில்கள் இருந்தன. தன் இருக்கைக்கு சென்ற ரொனால்டோ முதலில் அந்த கோக் பாட்டில்களை மேஜையில் இருந்து அகற்றினார். உடலுக்கு கெடுதல் என்கிற வகையில் அங்கிருந்து அப்புறப்படுத்தியதாக சொல்லப்பட்டது. அதோடு, தண்ணீர் குடியுங்கள் என்று கூறும் வகையில் அருகிலிருந்த தண்ணீர் பாட்டில்களை அவர் எடுத்து காட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கால்பந்து தொடருக்கு கோக் ஸ்பான்ஷராகவும் இருந்தது. தன் முன்னால் வைக்கப்பட்டிருந்த இரு பாட்டில்களை ரொனால்டோ அகற்றியதால் ஒரே நாளில் கோக்கின் சந்தை மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சரிவை சந்தித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஆர்.பி. உதயகுமார் மீது குவியும் புகார்!
வணிக பயன்பாடு சிலிண்டர் விலையேற்றம்… சென்னையில் தான் அதிகபட்ச விலை!