Vivo ‘ப்ரோ கபடி’ தொடரின் 10வது சீசனுக்கான ஏலம் மும்பையில் நடைபெற்றது. அக்டோபர் 9, 10 என 2 நாட்கள் நடைபெற்ற ஏலத்தில், ரூ.2.605 கோடி என்ற தொகையுடன் ப்ரோ கபடி வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை இந்திய கபடி அணியின் கேப்டன் பவன் ஷெராவத் பெற்றார். முன்னதாக, இதே பவன் ஷெராவத்தை 9வது சீசனில், தமிழ் தலைவாஸ் அணி ரூ. 2.26 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததே சாதனையாக இருந்தது.
அதேபோல, ஈரான் வீரர் ஈரான் முகமதுரேசா சியானே ரூ.2.35 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, ப்ரோ கபடி வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர்களுடன், மனீந்தர் சிங் (ரூ.2.12 கோடி), பசல் அட்ராச்சலி (ரூ.1.60 கோடி) மற்றும் சித்தார்த் தேசாய் (ரூ.1 கோடி) ஆகியோர் ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
நட்சத்திர இளம் வீரர்கள் சாகர் ராதே, அஜின்க்யா பவார், நரேந்தர், ஹிமான்ஷு உள்ளிட்டோரை அணியில் கொண்டுள்ள தமிழ் தலைவாஸ் அணி, அதிகபட்சமாக ரைடர் லட்சுமணன் மாசானமுத்துவை ரூ.31.60 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. அவருக்கு அடுத்தபடியாக, ஹிமான்ஷு சிங்கை ரூ.25 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்து, மீண்டும் அணியில் தக்கவைத்துக் கொண்டது.
இவர்களுடன், அமீர்ஹுசைன் பஸ்டாமி மற்றும் முகமதுரீஷா கபோட்ரஹாங்கி ஆகிய 2 தரமான ஈரானிய டிபெண்டர்களை, முறையே ரூ.30 லட்சம் மற்றும் ரூ.19.20 லட்சம் என்ற ஏலத்தொகைக்கு கைப்பற்றியுள்ளது.
சதீஷ் கண்ணன் ரூ.18.10 லட்சத்திற்கும், கே.செல்வமணி ரூ.13 லட்சத்திற்கும், ரித்திக் ரூ.9 லட்சத்திற்கும் தமிழ் தலைவாஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் தலைவாஸ் அணியின் முழு விவரம் இதோ!
ரைடர்ஸ்
அஜின்க்யா பவார்
நரேந்தர்
ஹிமான்ஷு
ஹிமான்ஷு சிங்
லட்சுமணன் மாசானமுத்து
கே.செல்வமணி
ஜதின்
விஷால் சாஹல்
நிதின் சிங்
சதீஷ் கண்ணன்
டிபெண்டர்கள்
சாகர் ராதே
சாஹில் குலியா
ஹிமான்ஷு
எம்.அபிஷேக்
அமீர்ஹுசைன் பஸ்டாமி
முகமதுரீஷா கபோட்ரஹாங்கி
மோஹித்
ஆஷிஷ்
ரோனக்
நிதிஷ்குமார்
ஆல் ரவுண்டர்
ரித்திக்
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம்!
லியோ நடன கலைஞர்கள் சம்பள விவகாரம்: மறுப்பு தெரிவித்த பெப்சி!
Comments are closed.