புரோ கபடி தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் வருகின்ற பிப்ரவரி 26-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளன. kabaddi playoffs Hyderabad February
கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கிய புரோ கபடி லீக்கின் 10-வது சீசனானது, வருகின்ற பிப்ரவரி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கேசி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான், பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் என மொத்தம் 12 அணிகள் களமிறங்கின.
தற்போது இந்த கபடி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலின்படி முதல் 2 இடங்களைப் பிடித்த புனேரி பல்தான், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன.
3 முதல் 6 இடங்களைப் பிடித்த தபாங் டெல்லி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் தற்போது பிளே -ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ், பெங்களூர் புல்ஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளன.
இந்தநிலையில் ஃப்ளே -ஆப் சுற்று வருகிற 26-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.
அன்றைய தினம் வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர் ) ஆட்டங்களில் தபாங் டெல்லி – பாட்னா பைரேட்ஸ் அணிகள் இரவு 8 மணிக்கும்,
குஜராத் ஜெயண்ட்ஸ் – ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இரவு 9 மணிக்கும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இவற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும். அரையிறுதி ஆட்டங்கள் 28-ந் தேதியும், மகுடத்துக்கான இறுதிப்போட்டி மார்ச் 1-ம் தேதியும் நடைபெறுகிறது.
வெளியேற்றுதல் சுற்று, அரையிறுதி போட்டிகள், இறுதிப்போட்டி என அனைத்துமே ஹைதராபாத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
-இரசிக பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
துப்பாக்கிச்சூட்டில் விவசாயி உயிரிழப்பு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
”மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம்”: எடப்பாடி காட்டம்!
kabaddi playoffs Hyderabad February