பலமிக்க பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு புனேரி பல்தான் முட்டுக்கட்டை போடுமா?

Published On:

| By Selvam

புனேவில் இன்று (டிசம்பர் 16) இரவு 8 மணிக்கு நடைபெறும் புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்தான், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

புரோ கபடி லீக் சீசன் போட்டியில் புனேரி பல்தான், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 18 முறை மோதியுள்ளது. இதில் புனேரி பல்தான் 9 முறையும் பெங்கால் வாரியர்ஸ் 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஒரு போட்டி டிராவில் முடிந்ததுள்ளது.

நடப்பு புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்தான் 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. புள்ளிபட்டியலில் 6-ஆவது இடத்தில் உள்ளது.

4 போட்டிகளில் விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் அணியானது, 3 வெற்றி, ஒரு டிரா என 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

புனேரி பல்தான் அணியில் ரைடர் மோகித் கோயத் 3 போட்டிகளில் விளையாடி 22 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளார். கடைசி போட்டியில் மட்டும் 7 புள்ளிகளை குவித்தார். டிபெண்டர் அபினேஷ் நடராஜன் 3 போட்டிகளில் 8 சூப்பர் டேக்கிள் பாயிண்ட்டுகளை எடுத்துள்ளார்.

பெங்கால் வாரியர்ஸ் அணியை பொறுத்தவரையில் ரைடர் மகேந்திர சிங் 45 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளார். டிபெண்டர் ஷுப்மன் ஷிண்டே நான்கு போட்டிகளில் 8 டேக்கில் பாயிண்டுகள் எடுத்துள்ளார்.

தொடர் வெற்றிகளை பெற்று வரும் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு புனேரி பல்தான் முட்டுக்கட்டை போடுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

எங்களுக்கு ஒரு படிப்பினை: மு.க.ஸ்டாலின்

கட்டில், மெத்தை, இறைச்சி… ED அதிகாரி அங்கித் திவாரிக்கு வழங்க உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel