தமிழ் தலைவாஸ் வாங்கிய 2.15 கோடி வீரர்… 18 ஆம் தேதி களைகட்ட போகும் புரோ கபடி!

Published On:

| By Kumaresan M

இந்தியாவில் கபடி விளையாட்டை பிரபலப்படுத்தவும் வீரர்களை ஊக்கப்படுத்தும்  வகையில் புரோ கபடி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 10 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளன. கடந்த ஆண்டு நடந்த தொடரில் புனேரி பால்டன் அணி சாம்பியன் பட்டம்வென்றது. இந்த ஆண்டுக்கான 11-வது புரோ கபடி லீக் போட்டி இந்த மாதம் 18-ந்தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இதில்,   நடப்பு சாம்பியன் புனேரி பால்டன், பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன.

மொத்தம் 3 நகரங்களில் இந்த தொடர் நடத்தப்படுகிறது. முதல் பகுதி ஆட்டங்கள் ஹைதராபாத்தில் அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரையும், 2-வது கட்ட ஆட்டங்கள் நொய்டாவில் நவம்பர் 10-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரையும், 3-வது பகுதி லீக் ஆட்டங்கள் புனேயில் டிசம்பர் 3-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையும் நடக்கவுள்ளன.

இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 18ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் – பெங்களூரு புல்ஸ் அணிகள் மோத உள்ளன. 2வது போட்டியில் தபாங் டெல்லி – யு மும்பா அணிகள் மோதுகின்றன. தமிழ் தலைவாஸ் அணி தனது தொடக்க லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸை அக்டோபர் 19ம் தேதி எதிர்கொள்கிறது.

இந்த ஆண்டுக்காக புரோ கபடி லீக் தொடருக்கு முன் நடந்த மினி ஏலத்தில் தமிழ் தலைவாஸ் நான்கு வீரர்களை மட்டுமே வாங்கியது. மொத்தம் ரூ.2.50 கோடி மட்டுமே ஏலத்தில் செலவிட்ட தமிழ் தலைவாஸ் அணி அதில் ரூ.2.15 கோடியை ஒரே வீரருக்கு கொடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.   சச்சின் தன்வார் என்ற வீரரைத் தான் தமிழ் தலைவாஸ் 2.15 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவரும் இவர்தான். தமிழ் தலைவாஸ் அணியில் 15 வீரர்கள்  இடம் பெற்றுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 தங்கை மீது மட்டும் பாசம்… சென்னையில் கொரிய மாணவரின் விபரீத முடிவு!

கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புக்கு தடை : அன்பில் மகேஸ் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel