பலமான யு மும்பாவை வீழ்த்தி… முத்தான 3-வது வெற்றியை பதிவு செய்யுமா தமிழ் தலைவாஸ்?

Published On:

| By Manjula

புனேவில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி விளையாட்டு அரங்கத்தில் இன்று (டிசம்பர் 17) நடைபெறும் 2-வது போட்டியில் யு மும்பா அணியை, தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொள்கிறது.

இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியை ஜெய்ப்பூர் பேந்தர்ஸ் எதிர்கொள்கிறது.

தமிழ் தலைவாஸ் அணி முதல் போட்டியில் வெற்றி, 2-வது போட்டியில் தோல்வி, 3-வது போட்டியில் வெற்றி என 2 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.

யு மும்பா அணி 2 வெற்றி 2 தோல்விகளுடன் 11 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் சரிசமமாகவே இருக்கும்.

தமிழ் தலைவாசை பொறுத்தவரை அஜிங்கியா, நரேந்தர், சாஹில் குலியா ஆகியோரின் ஆட்டத்தை பொறுத்தே அணியின் வெற்றி உள்ளது.

அதேபோல யு மும்பா அணியிலும் சுரிந்தர் சிங், மஹேந்தர் சிங், அமீர் மொஹமது சபர்தானேஷ் என வலுவான போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

முந்தைய சீசன்களில் இரண்டு அணிகள் மோதிய போட்டிகளை வைத்து பார்க்கையில் யு மும்பா அணியே அதிகம் வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்காக தமிழ் தலைவாஸ் அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

பலம் வாய்ந்த யு மும்பாவை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி தன்னுடைய 3-வது வெற்றியை பதிவு செய்யுமா? என்பதை நாம் பொறுத்திருந்தே  பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

அறிமுக போட்டியிலேயே அமர்க்களம் செய்த தமிழக வீரர்… கேப்டனாக கே.எல்.ராகுல் படைத்த புதிய சாதனை!

லோகேஷ் இயக்கும் தலைவர் 171-ல் ரத்னகுமார் இல்லை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share