இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா காதலிக்கு காதலர் தின வாழ்த்துகள் கூறும் வகையிலான புகைப்படம் ஒன்று இன்று (பிப்ரவரி 14 ) காலை வைரலான நிலையில் அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பிருத்வி ஷாவுக்கும் அவரது காதலியும், பிரபல நடிகையுமான நித்தி தபாடியாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது.
இருப்பினும், காதலர் தினமான இன்று பிருத்வி ஷாவும், நித்தி தபாடியாவும் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வெளியிடப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பரவியது.
தொடர்ந்து, நித்தி தபாடியாவும் இன்ஸ்டாவில்,”முதலில் உங்களை காதலியுங்கள்” என ஸ்டோரியில் பதிவிட்டு, அவரது காதலர் தின வாழ்த்தை குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பிருத்வி ஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இன்று (பிப்ரவரி 14 ) மாலை ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில்,”ஒருசிலர் எனது புகைப்படத்தை வைத்து சில காரியங்களை செய்கின்றனர். நான் அதனை ஸ்டோரியிலோ அல்லது எனது பக்கத்திலோ பதிவிடவில்லை. எனவே ரசிகர்கள் அதில் இருந்த கருத்தை புறக்கணிக்கவும்” என பதிவிட்டுள்ளார். அதாவது, காதலர் தினத்தை முன்னிட்டு, அவர் ஏதும் பதிவிடவில்லை என்றும், வைரலான புகைப்படம் போலியானது என்றும் தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அமீருடன் காதலர் தினத்தை கொண்டாடிய பவானி
அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை!