திரிபுராவுக்கு எதிராக அகர்தலாவில் நடைபெறும் ரஞ்சி கோப்பை போட்டியிலிருந்து பிரித்வி ஷாவை நீக்கியுள்ளது மும்பை அணி நிர்வாகம். அவர் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடிய பிரித்வி ஷா உடல் எடை வயதுக்கு மீறியதாக உள்ளது. இதனால், அணியின் பயிற்சியை வேண்டுமென்றே புறக்கணிப்பதாகவும் அவர் மீது புகார் சொல்லப்பட்டு வந்தது.
பெங்களூருவில் நடைபெற்ற கண்டிஷனிங் முகாமில் பங்கேற்பதை அவர் தவிர்த்தார். இந்த சமயத்தில் நார்த்தாம்ப்டன் ஷயர் அணிக்கு ஆடினார். சென்னையில் புச்சிபாபு தொடரிலும் ஆடினார். எந்த ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. ரஞ்சி தொடரில் மகாராஸ்டிரா அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 1 ரன்னும் இரண்டாவது இன்னிங்சில் 39 ரன்னும் அடித்தார். பரோடா அணிக்கு எதிராக 7 மற்றும் 12 ரன்களே சேர்த்தார்.
ஃபார்மிலும் இல்லை, உடல் எடையும் அதிகம். இதனால் களத்தில் மெதுவாக ஓடுவது போன்ற கோளாறுகள் அவரிடத்தில் உள்ளது. பீல்டிங்கில் சொதப்பல் என்று ஏகப்பட்ட சிக்கல் அவரிடம் இருப்பதால் அவர் நீக்கப்பட்டதாக தெரிகிறது.
பிரித்வி ஷாவுக்குப் பதிலாக 29 வயது இடது கை ஆட்டக்காரர் அகில் ஹெர்வாட்கர் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை 7 சதங்கள், 10 அரைசதங்கள் எடுத்துள்ளார்.
பிரித்வி ஷா தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பிரித்வி ஷா களத்தில் ஓடும் போது அவரது உடல் தகுதி மோசமாக உள்ளது. மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு என நீண்ட வரலாறு உள்ளது. ஒரு குறிப்பிட்ட வீரர் அதிலிருந்து விதிவிலக்கு பெற முடியாது.” என்று கூறியுள்ளார்.
கடந்த சீசனில் மும்பை அணிக்காக பிரித்வி ஷா 451ரன்கள் அடித்திருந்தார். சராசரி 83.51 ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
நிஜ வாழ்க்கையில் இதை செய்யாததுதான் என் தவறு- நடிகை சமந்தா உருக்கம்!
பிரபாஸ் நடிக்கும் ‘ராஜா சாப்’ ; மோஷன் போஸ்டர் வெளியீடு