அஜர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ் காலிறுதி போட்டியில், சக இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசியுடன், தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றிலேயே அரையிறுதிக்கு முன்னேறிய 2-வது இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இதனிடையே அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
முன்னதாக காலிறுதியில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் பிரக்ஞானந்தாவும் அர்ஜுனும் சமனில் இருந்தனர். இதனை அடுத்து வெற்றியை தீர்மானிக்க கூடிய டைபிரேக் போட்டி நடைபெற்றது. இதில் ரேபிட் செஸ் என்ற முறையில் ஆட்டம் நடந்தது. ரேபிட் செஸ் முறை பயன்படுத்தப்பட்டால் விளையாடும் வீரர்கள் காய்களை வேகமாக நகர்த்த வேண்டும்.
ஒரு கட்டத்தில் மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் பிரக்ஞானந்தா முன்னிலை பெற்ற நிலையில் ’sudden death’என்ற முறை கடைபிடிக்கப்பட்டது. இந்தச் சுற்றில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களே இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்ற சூழலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேநேரம் அர்ஜூன் எரிகைசியும் சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
திருமாவுக்கு வாழ்த்து சொன்ன விஜய்: பின்னணி இது தான்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
இந்தியா vs அயர்லாந்து முதல் டி20!