டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். praggnanandhaa defeats gukesh
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி தனது 18 வது சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார் தமிழகத்தின் கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ்.
தொடர்ந்து நெதர்லாந்து விஜ்க் ஆன் ஜீ நகரில் 87வது டாட்டா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்றார்.
இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் சிறப்பாக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களான குகேஷ், பிரக்ஞானந்தா இருவரும் 12 சுற்றுகளின் முடிவில் தலா 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் 13வது மற்றும் கடைசி சுற்று இன்று (பிப்ரவரி 3) நடந்தது. அதில் குகேஷ் சக நாட்டவரான அர்ஜுன் எரிகையின் 31வது நகத்தலில் தோல்வியடைந்தார். அதே போன்று பிரக்ஞானந்தா 7 மணி நேர நீண்ட இழுபறிக்கு பிறகு ஜெர்மனியின் வின்சென்ட் கீமரிடமும் தோல்வியை தழுவினார்.
குகேஷ் அதிர்ச்சி… பிரக்ஞானந்தா மகிழ்ச்சி! praggnanandhaa defeats gukesh
அதனால் இருவருமே தங்களது 8.5 புள்ளியுடன் முதலிடத்தில் தொடர, டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் முதல் ஆட்டத்தில் குகேஷ் வென்று முன்னிலை வகித்தார். ஆனால் அடுத்த இரண்டு ஆட்டங்களில் அசத்தலாக காய்களை நகர்த்திய பிரக்ஞானந்தா, உலக செஸ் சாம்பியன் குகேஷை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.
இதனை அடுத்து உலக செஸ் அரங்கில் மற்றொரு சாதனை படைத்த பிரக்ஞானந்தாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.