சிஎஸ்கே கைப்பற்றிய ஐபிஎல் கோப்பைக்கு சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் வைத்து இன்று (மே 30) பூஜை செய்யப்பட்டது.
இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடியாக கைப்பற்றியது. இதனை நாடு முழுவதும் உள்ள சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடினர். இரவு சென்னை அணி கோப்பையை கைப்பற்றியதுமே பல இடங்களில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டங்கள் களைக்கட்டியது.
சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் பலர் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (மே 30) மதியம் சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்பிங், சிஇஓ காசி விஸ்வநாதன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
அவர்களுடன் சிஎஸ்கே வென்ற ஐபிஎல் கோப்பை சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஏராளமான ரசிகர்கள் ஒன்று திரண்டு ஐபிஎல் கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் ஐபிஎல் கோப்பை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அங்கு கூடியிருந்த ரசிகர்களுக்கு கோப்பை காண்பிக்கப்பட்டது. அதனைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் கோஷமிட்டனர்.
மோனிஷா
சென்னையில் சூறைக்காற்று: வெதர்மேன் முக்கிய அறிவிப்பு!
கங்கை நதிக்கரையில் மல்யுத்த வீரர்கள் தர்ணா!