மோடி முதல் விக்ரம் பிரபு வரை… கோலியை வாழ்த்திய பிரபலங்கள்!

Published On:

| By christopher

modi rahul gandhi virat kohli 49th century

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (நவம்பர் 5) தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் குவித்தன் மூலம் ஜாம்பவான் சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார் விராட் கோலி.

அதாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் 451 இன்னிங்ஸில் அடித்த 49 சதங்கள்தான் இதுவரை அதிகபட்சமான சதங்களாக இருந்து வருகிறது. அந்த இமாலய சாதனையை தான் வெறும் 277 இன்னிங்ஸ்களில் நேற்று சமன் செய்துள்ளார் விராட்கோலி.

இந்திய அணியின் அபார வெற்றியுடன் அவரது 35வது பிறந்தநாளில் இந்த சாதனையை செய்துள்ளது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனையடுத்து உலகம் முழுவதும் உள்ள அரசியல், விளையாட்டு பிரபலங்களும், ரசிகர்களும் விராட்கோலிக்கு தங்களது சமூகவலைதளங்களில் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அவற்றில் சில…

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புதுவை கண்ணன் காலமானார்… தலைவர்கள் அஞ்சலி!

ஜவுளி உற்பத்தி நிறுத்தம்: தினமும் ரூ.100 கோடி முடங்கும் நிலை!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share