பாராட்டு மழையில் நனையும் அர்ஜென்டினா!

விளையாட்டு

நேற்று (டிசம்பர் 18) நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை அர்ஜென்டினா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, “மிகவும் பரபரப்பான கால்பந்து போட்டிகளில் ஒன்றாக இது நினைவு கூரப்படும். உலக கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்துக்கள்.

இந்த தொடர் முழுவதும் அர்ஜென்டினா அணி சிறப்பாக விளையாடியது. அர்ஜென்டினா அணி வெற்றியால், இந்தியாவில் உள்ள பல லட்சக்கணக்கான அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “என்ன ஒரு சிறப்பான ஆட்டம். திரில் வெற்றி பெற்ற அர்ஜென்டினாவிற்கு வாழ்த்துக்கள்.

பிரான்ஸ் அணி நன்றாக விளையாடியது. மெஸ்ஸி மற்றும் கிலியன் எம்பாபே இருவரும் உண்மையான சாம்பியன்கள் போல விளையாடினார்கள்.

விளையாட்டு என்பது எல்லைகளை கடந்து எப்படி அனைவரையும் ஒருங்கிணைக்கும் என்பதை ஃபிபா உலக கால்பந்து போட்டி மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு. க. ஸ்டாலின், “பிரான்ஸ் அணியின் இடைவிடாத போராட்ட மனப்பான்மை மற்றும் கிலியன் எம்பாபேவின் ஹாட்ரிக் கோல்களால் உலக கோப்பையின் சிறந்த இறுதி போட்டிகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

உலக கோப்பையை வென்ற மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கு எனது வாழ்த்துக்கள்.

முக்கியமாக, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்டினஸ் க்கு சிறப்பு பாராட்டுக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

அ. தி. மு. க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “எளிதில் கிடைப்பது வெற்றி அல்ல. போராடி கிடைப்பதே வெற்றி. போராடி வெற்றி கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்துக்கள்.

நான் கணித்தபடியே மூன்றாவது முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது அர்ஜென்டினா அணி” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், “அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்துக்கள்.

முதல் போட்டியில் தோற்றாலும் சிறப்பாக இறுதி போட்டி வரை விளையாடி உள்ளார்கள்.

பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா அணி வீரர் மார்டினசின் ஆட்டம் அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்பதற்கான அறிகுறியாக இருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பரந்தூர் விமான நிலையம்: எதிர்ப்பு பேரணி – போலீசார் குவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *