அஸ்வின் இல்லாத ஆடும் லெவன்: ரோகித் விளக்கம்!

Published On:

| By Jegadeesh

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடும் லெவனில் இந்திய அணியின் பந்து வீச்சாளர் அஸ்வின் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்கான விளக்கத்தை ரோகித் சர்மா அளித்துள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, இன்று(ஜூலை 7) ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தற்போது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில், உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலரான அஸ்வின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாததற்கு நெட்டிசன்கள் தங்களது கடும் விமர்சனங்களை சமூக வலைதளங்கள் மூலம் வைத்து வருகின்றனர்.

இப்படி நெட்டிசன்கள் விமர்சிப்பதற்கான காரணம் என்னவெனில், இந்திய ஆடும் அணியில் ஷமி, உமேஷ் யாதவ், சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்களும்,

சுழற்பந்து தரப்பில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் ஆடும் லெவனில் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததே.

இந்நிலையில் , அஸ்வினுக்கு ஏன் வாய்ப்பளிக்கப்படவில்லை என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து இன்று(ஜூலை 7) பேசிய ரோகித், “நாங்கள் முதலில் பந்துவீச உள்ளோம். வானம் மேகமூட்டமாக உள்ளது.

ஆடுகளத்தின் தன்மை பெரிதாக மாறும் என்று நான் நினைக்கவில்லை. இந்தப் போட்டியில் நன்றாக விளையாடி ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

4 வேகப்பந்து வீச்சாளர்களையும், ஒரு ஸ்பின்னரையும் எடுத்துள்ளோம். அந்த சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாதான்.

பல வருடங்களாக அணியின் மேட்ச் வின்னராக இருந்துவரும், அஸ்வினை எடுக்காதது கடினமான முடிவுதான்.

ஆனால் அணி வெற்றியடைவதற்கு தேவையான விஷயங்களை செய்ய வேண்டும் என்பதால், இறுதியில் நாங்கள் அந்த முடிவை எடுத்தோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது, விராட் கோலி எப்போதுமே அஸ்வினை வெளியில் அமர வைப்பார் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதேபோல், இன்று ரோகித் சர்மா செய்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் எடுக்கப்படவே வாய்ப்பு உண்டு என்று தெரிவித்து வந்தநிலையில், தற்போது அவர் எடுக்கப்படவில்லை.

இந்த நேரத்தில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், கடந்த முறை நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அஸ்வின் 2 இன்னிங்சிலும் சேர்த்து பேட்டிங்கில் 29 ரன்களும், பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார் என்பதுதான்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“ஆர்.என்.ரவி ஆளுநரா அரசியல்வாதியா?” – பி.சி.ஸ்ரீராம் காட்டம்!

WTC Final: சிறப்பாக விளையாடி வரும் டிராவிஸ், ஸ்மித் ஜோடி!

Playing XI without Ashwin
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment