ஐபிஎல் 2025 மெகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெறவுள்ளது. இதுவரை 10 அணிகளுக்கு ஏலத்திற்கு முன்பே 46 வீரர்களை மொத்தமாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிகபட்சமாக பஞ்சாப் அணி 110 கோடியே 50 லட்சம் ரூபாயுடன் மெகா ஏலத்தில் பங்கேற்கிறது. ஒவ்வொரு அணியும் 25 வீரர்கள் வரை வாங்கிக் கொள்ள முடியும்.
இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 1574 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவில் இருந்து 1165 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் 409 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். இதில், 320 வீரர்கள் தற்போது தங்களின் தேசிய அணிக்காக விளையாடி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து அதிகபட்சமாக 91 வீரர்களும், ஆஸ்திரேலியாவிலிருந்து 76 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இங்கிலாந்தில் இருந்து 52 வீரர்களும், நியூசிலாந்தில் இருந்து 39 வீரர்களும், வெஸ்ட் இண்டீசில் இருந்து 33 வீரர்களும், இலங்கையிலிருந்து 29 வீரர்களும், ஆப்கானிஸ்தானில் இருந்து 29 வீரர்களும், வங்கதேசத்திலிருந்து 13 வீரர்களும், நெதர்லாந்தில் இருந்து 12 வீரர்களும், அமெரிக்காவிலிருந்து பத்து வீரர்களும், அயர்லாந்தில் இருந்து 9 வீரர்களும் பங்கேற்கின்றனர்.
வழக்கம்போல் பாகிஸ்தானில் இருந்து ஒரு வீரரும் இந்த ஏலத்தில் பதிவு செய்யவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாட தொடர்ந்து தடை இருந்து வருகிறது.
இதற்கிடையே இந்திய நட்சத்திர வீரர்களான முகமது ஷமி ,ரிஷப் பண்ட், ஸ்ரேஷயாஸ் ஐயர், கே.எல். ராகுல், அஸ்வின், வெங்கடேஷ் ஐயர், இஷான் கிஷான், புவனேஷ் குமார், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், முகேஷ் யாதவ், குருணால் பாண்ட்யா ஆகியோரும் ஏலத்துக்கு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
நீங்கள் இருவரும் இந்துக்கள், குழந்தைக்கு இப்படி பெயர் வைக்கலாமா? தீபிகா மீது பாய்ந்த நெட்டிசன்கள்
அதிபராகும் டொனால்ட் டிரம்ப்… சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?