புரோ கபடி 10: டெல்லியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்குமா தமிழ் தலைவாஸ் ?

புரோ கபடி விளையாட்டு

கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் புரோ கபடி லீக் சுற்று போட்டிகள் நேற்று (டிசம்பர் 2) அகமதாபாத்தில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ்  – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 38-32 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் வென்றது.

இரண்டாவது போட்டியில் யு மும்பா – யு.பி.யோத்தா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய யு மும்பா அணி 34-31 என்ற கணக்கில் யு.பி.யோத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ், யு மும்பா அணிகள் முதல் ஆட்டத்திலேயே வெற்றிக்கணக்குடன் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் தமிழக ரசிகர்களின் பேவரைட் அணியான தமிழ் தலைவாஸ் இன்று (டிசம்பர் 3) இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

இதற்கு முன் தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் நேருக்கு நேராக 8 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 5 போட்டிகளில் டெல்லி அணியும், 1 போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் வென்றுள்ளன. இரண்டு போட்டிகளுக்கு முடிவில்லை.

சாகர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி இந்த புதிய சீசனை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. அதேபோல இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தமிழ் தலைவாஸ் அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தது.

இதனால் இன்றிரவு (டிசம்பர் 3) தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி அணிகள் இடையிலான கபடி ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி-பெங்களூர் புல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

தேர்தல் முடிவுகள்: ராகுல் ரியாக்‌ஷன்!

தெலங்கானா: இரண்டு முதல்வர் வேட்பாளர்களை வீழ்த்திய பாஜக

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *