PKL Season 10 Tamil Thalaivas Win
ப்ரோ கபடி தொடரின் 10வது சீசனில், முதல் 3 போட்டிகளில் 2இல் வெற்றி பெற்று அபாரமாக தொடரை துவங்கிய தமிழ் தலைவாஸ் அணி, அதன் பின் விளையாடிய 7 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்தது.
குறிப்பாக, ஜெய்ப்பூர் பின்க் பேந்தர்ஸ் அணிக்கு எதிராக 24-25, குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணிக்கு எதிராக 30-33, பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக 37-38, புனேரி பல்டன்ஸ் அணிக்கு எதிராக 26-29 என வெற்றிக்கு மிக அருகில் வந்து, ஆட்டத்தை இழந்து ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
இப்படியான சூழ்நிலையில், “தமிழ் தலைவாஸ் அணி எப்போது கம்-பேக் கொடுக்கும்?” என்ற ரசிகர்களின் கேள்விக்கு மத்தியில், இந்த 10வது சீசன் ப்ரோ கபடி தொடரின் முதல் பாதியின் கடைசி ஆட்டத்தில் உ.பி யோதாஸ் அணிக்கு எதிராக களமிறங்கியது சாகர் ராதேவின் படை.
போட்டியின் துவக்கத்தில் இருந்தே பர்தீப் நர்வாலின் அணிக்கு எதிராக தனது ஆதிக்கத்தை செலுத்திய தமிழ் தலைவாஸ் அணி, முதல் பாதியில் 7 நிமிடங்கள் முடிவதற்குள்ளேயே உ.பி யோதாஸ் அணியை ஆல்-அவுட் செய்தது.
இதன் காரணமாக 11-2 என்ற ஒரு இமாலய முன்னிலையை தமிழ் தலைவாஸ் பெற்றது. தொடர்ந்து, ரெய்டு மற்றும் டிபென்ஸ் என 2 பிரிவுகளிலும் அபாரமாக செயல்பட்ட தமிழ் தலைவாஸ், முதல் பாதியின் முடிவில் 19-11 என முன்னிலை பெற்றது.
தமிழ் தலைவாஸ் 7 டாக்கில் புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், நரேந்தர் 6 ரெய்டு புள்ளிகளை குவித்து அசத்தினார்.
2ஆம் பாதியில் தமிழ் தலைவாஸ் அணியின் ஆட்டம் மேலும் ஆக்ரோஷம் அடைந்த நிலையில், 2வது பாதியின் முதல் 7 நிமிடங்களுக்குள்ளேயே உ.பி யோதாஸ் அணி இந்த ஆட்டத்தில் 2வது முறையாக ஆல்-அவுட்டை சந்தித்தது.
தொடர்ந்து, 2வது பாதியின் 19வது நிமிடத்தில் உ.பி யோதாஸ் 3வது முறையாக ஆல்-அவுட் ஆனது.
ஆட்டத்தின் முடிவில் 46 – 27 என 19 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி இமாலய வெற்றியை பதிவு செய்தது.
தமிழ் தலைவாஸ் அணிக்காக, இளம் வீரர் நரேந்தர் 14 ரெய்டு புள்ளிகளை பெற்று அசத்தினார். வலது கார்னரில் விளையாடிய தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் சாகர் ராதே 6 டாக்கில் புள்ளிகளை குவித்து மிரட்டியுள்ளார்.
அவருக்கு போட்டியாக இடது கார்னரில் விளையாடிய சாஹில் குலியா 5 டாக்கில் புள்ளிகளை கைப்பற்றியுள்ளனர்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கிழங்கான் மீன் வறுவல்
IND vs AFG: முதல் போட்டியில் விராட் கோலி இல்லை: டிராவிட் அதிர்ச்சி தகவல்!
முடிந்தது ஷூட்டிங் : லேட்டஸ்ட் கங்குவா லுக் வெளியிட்ட சூர்யா
காரோடு சேர்த்து மனைவியை இழுத்துச் சென்ற கணவர்- கண்டுகொள்ளாத போலீஸ்: குமரி கொடுமை!
PKL Season 10 Tamil Thalaivas Win