Pro Kabaddi 2024-25: மிகவும் பிரபலமடைந்த ப்ரோ கபடி லீக் தொடரின் 11வது சீசன் அக்டோபர் 18 அன்று துவங்கவுள்ளது. இந்த தொடரில் 12 அணிகள் பங்கேற்கும் நிலையில், அதற்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
2023-24 ப்ரோ கபடி சீசன் தமிழ் தலைவாஸ் அணிக்கு ஒரு சிறப்பான தொடராக அமையாத நிலையில், அந்த அணி அணியில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டது. குறிப்பாக, 2024-25 ப்ரோ கபடி தொடரின் ஏலத்திற்கு முன்னதாக, தனது அணியின் நட்சத்திர வீரரான அஜின்கியா பவாரை தமிழ் தலைவாஸ் அணி விடுத்திருந்தது.
இதை தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில், அதிரடி ரைடரான சச்சின் தன்வரை ரூ.2.15 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு தமிழ் தலைவாஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
முன்னதாக, புதிய தலைமை பயிற்சியாளராக உதயகுமார், புதிய ஸ்ட்ரேடஜி பயிற்சியாளராக சேரலாதன் ஆகியோரை இந்த அணி நியமித்திருந்தது.
இந்நிலையில், தொடர்ந்து 3வது ஆண்டாக சாகர் ராதேவே 2024-25 ப்ரோ கபடி தொடரில் அணியை வழிநடத்துவார் என தமிழ் தலைவாஸ் அணி அறிவித்துள்ளது. மேலும், ஒரு துணை கேப்டனாக டிபென்ஸில் அணையின் தூணாக விளங்கும் சாஹில் குலியா நியமிக்கப்பட்டுள்ளார். மற்றோரு துணை கேப்டன் பொறுப்பு அணியில் புதிதாக இணைந்துள்ள சச்சின் தன்வருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் தலைவாஸ் போட்டி அட்டவணை!
அக்டோபர் 19 – தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் – ஐதராபாத்
அக்டோபர் 23 – தமிழ் தலைவாஸ் vs புனேரி பல்டான்ஸ் – ஐதராபாத்
அக்டோபர் 25 – தமிழ் தலைவாஸ் vs பாட்னா பைரட்ஸ் – ஐதராபாத்
அக்டோபர் 27 – தமிழ் தலைவாஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பேன்தரஸ் – ஐதராபாத்
அக்டோபர் 30 – தமிழ் தலைவாஸ் vs குஜராத் ஜெய்ன்ட்ஸ் – ஐதராபாத்
நவம்பர் 4 – தமிழ் தலைவாஸ் vs பெங்களூரு புல்ஸ் – ஐதராபாத்
நவம்பர் 6 – தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் – ஐதராபாத்
நவம்பர் 8 – தமிழ் தலைவாஸ் vs தபாங் டெல்லி கே.சி – ஐதராபாத்
நவம்பர் 14 – தமிழ் தலைவாஸ் vs யூ மும்பா – நொய்டா
நவம்பர் 16 – தமிழ் தலைவாஸ் vs பெங்கால் வாரியர்ஸ் – நொய்டா
நவம்பர் 17 – தமிழ் தலைவாஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ் – நொய்டா
நவம்பர் 22 – தமிழ் தலைவாஸ் vs உ.பி யோதாஸ் – நொய்டா
நவம்பர் 26 – தமிழ் தலைவாஸ் vs தபாங் டெல்லி கே.சி – நொய்டா
நவம்பர் 29 – தமிழ் தலைவாஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ் – நொய்டா
டிசம்பர் 1 – தமிழ் தலைவாஸ் vs தபாங் டெல்லி கே.சி – நொய்டா
டிசம்பர் 6 – தமிழ் தலைவாஸ் vs குஜராத் ஜெய்ன்ட்ஸ் – நொய்டா
டிசம்பர் 11 – தமிழ் தலைவாஸ் vs யூ மும்பா – புனே
டிசம்பர் 13 – தமிழ் தலைவாஸ் vs பாட்னா பைரட்ஸ் – புனே
டிசம்பர் 15 – தமிழ் தலைவாஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பேன்தரஸ் – புனே
டிசம்பர் 18 – தமிழ் தலைவாஸ் vs பெங்கால் வாரியர்ஸ் – புனே
டிசம்பர் 22 – தமிழ் தலைவாஸ் vs பெங்களூரு புல்ஸ் – புனே
டிசம்பர் 23 – தமிழ் தலைவாஸ் vs புனேரி பல்டான்ஸ் – புனே
தமிழ் தலைவாஸ் அணி விவரம்
ரைடர்ஸ்
சச்சின் தன்வார் (VC)
சௌரப் ஃபகாரே
நரேந்தர்
நிதின் சிங்
விஷால் சாஹல்
டிபென்டர்கள்
அமீர்ஹோசைன் பஸ்தாமி
ஹிமான்ஷு
சாஹில் குலியா (VC)
மோஹித்
ஆஷிஷ்
சாகர் ராதே (C)
எம் அபிஷேக்
நிதேஷ் குமார்
ரோனக்
ஆல்-ரவுண்டர்கள்
மொயின் சஃபாகி
– மகிழ்
இரவில் குடிபோதையில் சிறார்களை தாக்கிய பாடகர் மனோவின் மகன்!
”எங்களுக்கே பாதுகாப்பு இல்லை”: காவல்துறைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!