தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக அமைச்சர் பொன்முடியின் இளையமகன் அசோக் சிகாமணி கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓய்வுபெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர்.
இந்நிலையில் பிசிசிஐ மூலம் நிதி பெற முடியாத 2004 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி 10 முதல் 20 ரஞ்சி போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 9 ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ. 5,000 ஓய்வூதியம் வழங்க கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதற்கு தகுதியுள்ள வீரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆஸ்கர் விருது போட்டியில் ஆர்ஆர்ஆர்
“காவி இருக்கும் இடத்தில் இருந்தால்தான் நல்லது”: செல்லூர் ராஜூ காட்டம்!