ஆசிய கோப்பை டி20 ஓவர் கிரிக்கெட் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் இந்திய அணி 19.4 ஒவர்களில் 148 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

ஆனால் இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே ஐசிசி விதிகளின் படி 85 நிமிடங்களுக்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதன் காரணமாக ஐசிசி புதிய விதிகளின் படி 5 பீல்டர்களை சர்க்கிளுக்குள் வைத்து கடைசி ஓவர்களை இரு அணிகளும் வீசின.
இந்த போட்டியின்போது இரு அணி பந்து வீச்சாளர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காததால் இரு அணிகளுக்கும் போட்டி ஊதியத்தில் 40% ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
அதன்படி இந்திய அணிக்கு 13.20 லட்சமும் பாகிஸ்தான் அணிக்கு 5.92 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
–சீனிவாசன்
டி20 உலக கோப்பை : சாதனை படைக்கும் இந்தியா – பாகிஸ்தான்!
டிஜிட்டல் திண்ணை: திமுகவுக்கு செல்லும் 3 அதிமுக எம்.எல்.ஏக்கள்! ஆபரேஷன் ஸ்டார்ட்!