பாகிஸ்தான் அணி வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முல்தானில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஆனால், இதுவரை இந்த டெஸ்ட் தொடருக்கான சர்வதேச ஒளிபரப்பு உரிமத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டால் விற்க முடியவில்லை.
பாகிஸ்தானில் மட்டும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் மூன்று ஆண்டு உரிமத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு 51 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. இது மிக குறைவான சந்தை மதிப்பாகும்.
அதேவேளையில், சர்வதேச கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை 175 கோடி ரூபாய்க்கு விற்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முயன்றது. 2024 முதல் 2026 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமம் இது.
ஆனால், எந்த நிறுவனமும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நிர்ணயித்த தொகையில், பாதி அளவு கூட தர முன்வரவில்லை. இரு பாகிஸ்தான் நிறுவனங்கள் சேர்ந்து 34 கோடி மட்டுமே அளிக்க முன்வந்தன. வில்லோ டிவி என்ற சர்வதேச கிரிக்கெட் ஒளிபரப்பு நிறுவனம் 18.75 கோடி ரூபாய்க்கு கேட்டது. அதை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஏற்கவில்லை. பின்னர் வெளிநாட்டு நிறுவனமான ஸ்போர்ட்ஸ் 5 , ரூ. 65 கோடிக்கு விலை பேசியது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இந்த விலையையும் ஏற்கவில்லை .
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் என்பதால் லண்டனை சேர்ந்த ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் உரிமத்தை வாங்கும் என எதிர்பார்த்தது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. ஆனால், அந்த நிறுவனமும் கண்டு கொள்ளவில்லை.
இதனால், உரிமத்தை விற்க முடியாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தவிக்கிறது. பாகிஸ்தான் அணியினரின் தொடர் தோல்விகளும் திறமையற்ற வீரர்களுமே இதற்கு காரணமென்று கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஒரு மக்கள் பிரதிநிதி இப்படியெல்லாம் பேசலாமா? : சிவி சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
கால்பந்து விளையாட்டில் மகனுக்கு ரெட் கார்டு… தந்தைக்கு ‘காப்பு’!