IPL 2024: ‘அது ஒரு ஆக்சிடென்ட்’… பஞ்சாப்பிற்கு எதிராக தெறிக்கும் மீம்ஸ்கள்!

விளையாட்டு

நேற்று (ஏப்ரல் 4)  நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இடையிலான போட்டியில் 2௦௦  ரன்கள் என்ற இலக்கை எட்டி, பஞ்சாப் அணி மீண்டும் பார்முக்கு திரும்பியது.

பஞ்சாப் அணியின் ஆரம்ப வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனாலும் கூட, அந்த அணியின் சஷாங்க் சிங் 61 ரன்கள் அடித்து பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அவருக்கு பக்கபலமாக இம்பாக்ட் பிளேயர் ஆசுதோஷ் சர்மா 17 பந்துகளில் 31 ரன்களை குவித்தார். சஷாங்க் – ஆசுதோஷ் அதிரடியால் பஞ்சாப் இரண்டாவது வெற்றியைப் பெற்று பிளே ஆஃப் வாய்ப்பினையும் தக்க வைத்துள்ளது.

இதில் சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால் ஐபிஎல் ஏலத்தின்போது சஷாங்க் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள் இருந்ததால், குழப்பத்தில் இவரை எடுத்து விட்டோம் என பஞ்சாப் அணியினர் கூறினர்.

ஆனால் ஏலம் நடத்துபவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், நாங்கள் குழம்பி விட்டோம் என்று கூறி சமாளித்தனர். இதைக் கேள்விப்பட்ட சஷாங்க் என்னை விடுவித்து விடுங்கள் என்று பஞ்சாப் அணியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து சமூக வலைதளத்தில் நாங்கள் சரியான நபரைத்தான் எடுத்துள்ளோம். ஒரு சின்ன குழப்பம் நிகழ்ந்து விட்டது என்று கூறி, பஞ்சாப் இதுதொடர்பான சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.

IPL 2024: ‘வந்துட்டாப்ல வந்துட்டாப்ல’… கொண்டாட்டத்தில் மும்பை ரசிகர்கள்!

பதிலுக்கு சஷாங்க்கும் ‘கூல்’ என்று பதில் அளித்தார். இதற்கிடையில் நேற்றைய ஆட்டத்தில் வெல்வதற்கு அவர் காரணமாக இருந்ததால், ரசிகர்கள் பஞ்சாப் அணியின் பழைய ட்வீட்டை தேடி எடுத்து கிண்டல் செய்து வருகின்றனர்.

அதில் இருந்து நாம் ஒருசில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

2021 தேர்தலிலும் இதே இவிஎம் மெஷின் தான்… திமுக வழக்கில் தேர்தல் ஆணையம் வாதம்!

கல்வி கடன் தள்ளுபடி… ஜி.எஸ்.டி 2.0: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

Vidaamuyarchi: இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *