பாரிஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2024 பாராலிம்பிக்ஸில் இந்திய அணி இன்று (ஆகஸ்ட் 30) நான்கு பதக்கங்கள் வென்றுள்ளது.
ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் 17 வது பாராலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் என்று சொல்லப்படும் இந்த பாராலிம்பிக்ஸ் செப்டம்பர் 8-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.
இந்த நிலையில் பெண்களுக்கான 100 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவின் அவனி லேகரா 249.7 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் 3 பாராலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற வரலாற்றையும் அவர் படைத்தார்.
இதே போட்டியில் இந்தியாவை சேர்ந்த மோனா அகர்வால் 228.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
மேலும், பெண்களுக்கான 100 மீட்டர் டி35 ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
தொடர்ந்து பாரீஸ் 2024 பாராலிம்பிக்ஸில் ஆண்களுக்கான 10மீ துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவின் மணீஷ் நர்வால் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாராலிம்பிக்ஸ் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் போட்டியில் தங்கம் வென்று இந்தியா தனது பதக்கக் கணக்கைத் திறந்து வைத்துள்ள அவனி லேகராவுக்கு வாழ்த்துகள். அவரது அர்ப்பணிப்பு இந்தியாவை பெருமைப்படுத்துகிறது. இந்த வெற்றி நிச்சயமாக வளரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-அப்துல் ரஹ்மான்
பாஜகவில் இணைந்தார் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்!
அலகாபாத் டூ சென்னை… உயர்நீதிமன்ற நீதிபதியாகிறார் ஷமீம் அகமது