2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற உள்ள 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் அமெரிக்க தடகள வீரர் நோவா லைல்ஸ் தங்கப் பதக்கத்தை வெல்ல எல்லா முயற்சிகளையும் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தற்போதைய டபில் ஸ்ப்ரின்ட் உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. Noah Lyles olympics
இதைப்போல, 2020 ஒலிம்பிக்கின் 100 மீட்டர் தங்கப் பதக்கத்தை வென்ற இத்தாலியின் மார்செல் ஜெகப்ஸ் இரண்டாவது முறையாகத் தங்கம் வென்று, ஒலிம்பிக்கில் ஒருமுறைக்கு மேல் தங்கப் பதக்கம் வாங்கிய பட்டியலில் இணைய கடுமையான முயற்சிகளை மேற்கொள்வார் என்று தெரிகிறது. Noah Lyles olympics
கார்ல் லீவிஸ் மற்றும் உசைன் போல்ட் மட்டும் தான் ஒலிம்பிக் 100 மீட்டர் போட்டியில் ஒன்றிற்கும் அதிகமான தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் வெள்ளியை வென்ற அமெரிக்க வீரரான ஃபிரெட் கெர்லி, இம்முறை அதைத் தங்கமாக மாற்றுவதில் மும்முரம் காட்டுகிறார்.
இவர்கள் மட்டும் அல்லாமல் ஒலிம்பிக் சோதனை போட்டியில் 100 மீட்டர் தூரத்தை 9.77 நொடியில் கடந்த ஜமைக்கா நாட்டை சேர்ந்த வீரர் கிஷேன் தாம்ப்சன் மேற்குறிப்பிட்ட அனைவரின் ஆசைகளையும் தகர்க்கக்கூடும் என்று ஒலிம்பிக் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
“வாழ்க்கையில ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா”… அஜித்தின் 32 ஆண்டுகள் பயணம்!
திருப்பத்தூர்: திடீரென சரிந்த ராட்டினம்… அந்தரத்தில் அலறிய மக்கள்… திக் திக் நிமிடங்கள்!
ஆடி அமாவாசை… ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!