பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வருகிற ஜூன் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் ஹாக்கி போட்டிக்குரிய அட்டவணை நேற்று (மார்ச் 6) வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியானது சுவிட்சர்லாந்தின் லாசானேவில் உள்ள ஒலிம்பிக் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவர் தயாப் இக்ராம் ஆகியோர் கலந்து கொண்டு ஹாக்கி போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டனர். இதன்படி ஹாக்கி போட்டி ஜூலை 27-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் பங்கேற்கும் 12 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெறும். தொடக்க நாளில் (ஜூலை 27) நடைபெறும் லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா – அமெரிக்கா, நெதர்லாந்து-பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
தொடர்ந்து ஆகஸ்டு 5-ம் தேதி காலிறுதி ஆட்டமும், 7-ம் தேதி அரையிறுதி ஆட்டமும், 9-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளது. இந்த பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கு, இந்திய பெண்கள் அணி பிரிவு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-மாணவ நிருபர் கவின்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்”: மதிமுக தீர்மானம்!