Olympic 2024: இந்தியாவுக்கு பதக்கம் உறுதி… வினேஷ் போகத் புதிய வரலாறு!

விளையாட்டு

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆகஸ்ட் 5 முதல் மல்யுத்தப் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மகளிர் ஃபிரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவுக்கான போட்டிகள் நேற்று (ஆகஸ்ட் 6) துவங்கின. இந்த பிரிவின் முதல் சுற்றில், இந்தியாவின் வினேஷ் போகத் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இதே பிரிவில் தங்கம் வென்ற, 4 முறை உலக சாம்பியனான ஜப்பானின் யூ சுசாகியை எதிர்கொண்டார். இந்த போட்டியில், முதலில் வினேஷ் போகத் 0-2 என பின்தங்கியிருந்தார். ஆட்டம் முடிய 10 வினாடிகள் தான் இருந்தது.

இந்த இடத்தில் இருந்து 4 முறை உலக சாம்பியனை வீழ்த்துவது மிகவும் கடினம் என்ற நிலையில், களத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய வினேஷ் போகத், அந்த 10 வினாடிகளில் 3 புள்ளிகளை பெற்று, 3-2 என யூ சுசாகியை வீழ்த்தினார்.

 

இதை தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், வினேஷ் போகத் உக்ரைனின் ஓக்சானா லிவாச்சை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில், துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத், 7-5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதி ஆட்டத்தில் புதிய வரலாறை நோக்கி களமிறங்கிய வினேஷ் போகத், கியூபாவின் யுஸ்னெய்லிஸ் லோபஸை எதிர்கொண்டார்.

இந்த போட்டியின் முதல் சுற்றில் 1 புள்ளியை எடுத்து 1-0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில், 2வது சுற்றில் நிகழ்த்திய அதிரடி தாக்குதலில் அடுத்தடுத்து 2 புள்ளிகளை பெற்று, 5-0 என அபார வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள வினேஷ் போகத், இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த விளையாட்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் வினேஷ் போகத் பெற்றுள்ளார்.

ஆகஸ்ட் 7 அன்று நடைபெறவுள்ள இந்த இறுதிப்போட்டியில், வினேஷ் போகத் அமெரிக்காவின் சாரா ஹில்டெபிரான்ட்டை எதிர்கொள்ள உள்ளார்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: காய்கறிக் குழம்பு

பிக் பாஸில் இருந்து விலகும் கமல்

வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம்: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *