விறுவிறுப்பாக நடந்து வரும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 4வது நாளான இன்று (ஜூலை 30) இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் மற்றும் நேரம் குறித்து இங்கு காணலாம்.
துப்பாக்கி சுடுதல்
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இன்று இந்தியாவின் சரப்ஜோத் சிங்-மனு பாக்கர் ஜோடி, பகல் 1 மணிக்கு தென்கொரியாவின் ஜின் ஓ யே-வோன்ஹோ லீ ஜோடியை எதிர்கொள்கிறது.
பெண்கள் டிராப் பிரிவு தகுதி சுற்று போட்டியில் ஸ்ரேயாசி சிங் மற்றும் ராஜேஸ்வரி குமாரி பங்கேற்கின்றனர்.
ஆடவர் டிராப் 2-வது நாள் தகுதி சுற்று போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமான் பங்கேற்கிறார். இரு போட்டிகளும் பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
வில்வித்தை
ஆடவர் தனிநபர் வில்வித்தை பிரிவில் இரவு 9.15 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா செக்குடியரசின் ஆடம் லீயை எதிர்கொள்கிறார்.
மகளிர் தனிநபர் வில்வித்தை பிரிவில் போலந்தின் வியோலிடா மைசோரை, இந்தியாவின் அங்கிதா பகத் மாலை 5.14 மணி எதிர்கொள்கிறார்.
இதே பிரிவில் மாலை 5.27 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தோனேசியாவின் சிபா நுராபிபாவை, இந்தியாவின் பஜன் கவுர் எதிர்கொள்கிறார்.
குத்துச்சண்டை
இரவு 7.16 மணிக்கு நடைபெறும் ஆண்கள் 51 கிலோ முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அமித் பன்ஹால், ஜாம்பியாவின் பேட்ரிக் சினிம்பாவை எதிர்கொள்கிறார்.
பெண்கள் 57 கிலோ 5 எடைப்பிரிவு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் ஜாஸ்மின், பிலிப்பைன்ஸின் நெஸ்டி பெட்சியோவை எதிர்கொள்கிறார். இந்த போட்டி இரவு 9.24 மணி நடைபெறுகிறது.
பேட்மிண்டன்
ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் லீக் சுற்று போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் முகமது ரியான் அட்ரியான்டோ-பஜர் அல்பியான் ஜோடியை மாலை 5.30 மணிக்கு எதிர்கொள்கிறது.
பெண்கள் இரட்டையர் பேட்மிண்டன் லீக் சுற்று போட்டியில்அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி, ஆஸ்திரேலியாவின் செத்யானா மபசா-ஏஞ்சலா யு. இந்த போட்டி மாலை 6.20 மணிக்கு நடைபெறுகிறது.
துடுப்பு படகு
பகல் 1.40 மணிக்கு நடைபெறும் ஆடவர் ரோவிங் சிங்கிள் ஸ்கல்ஸ் காலிறுதி போட்டியில் பால்ராஜ் பன்வார் பங்கேற்கிறார்.
ஆக்கி
நியூசிலாந்து அணியுடன் வெற்றி, அர்ஜென் டினாவுடன் டிரா செய்த இந்திய ஆடவர் ஆக்கி அணி இன்று மாலை 4.45 மணிக்கு நடைபெறும் லீக் சுற்று போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
குதிரையேற்றம்
டிரஸ்ஸேஜ் தனிநபர் பிரிவில் பகல் 2.30 மணிக்கு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்தியாவின் முதல் வீரர் என்ற பெருமையை அனுஷ் அகர்வாலா பெற உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
போலி பேராசிரியர்கள் நியமனம்: 295 கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்!
தனியார் மருத்துவமனைகளிலும் தமிழக அரசின் குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசிகள் திட்டம்!