ஹாக்கியில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுமா இந்தியா?

Published On:

| By Kavi

Paris Olympics 2024: வரும் ஜூலை 26 அன்று துவங்கவுள்ள 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில், 16 விளையாட்டுப் பிரிவுகளில் 117 வீரர், வீராங்கனைகளுடன் பல பதக்கங்களை எதிர்நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.

இதில் இந்திய ஹாக்கி அடவர் அணி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுதியாக உள்ளது என்றே கூற வேண்டும்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி, காலிறுதியில் கிரேட் பிரிட்டன் அணியை 3-1 என வீழ்த்திய இந்தியா, அரையிறுதியில் பெல்ஜியம் அணியிடம் 5-2 என தோல்வியடைந்தது.

இருந்தபோதும், வெண்கலப் பதக்கத்திற்காக நடைபெற்ற போட்டியில், பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை 5-4 என வீழ்த்திய இந்தியா, வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றியது.

1928 முதல் 1980 வரை, ஹாக்கி விளையாட்டில் இந்தியாவிற்கு பொற்காலமாகவே இருந்தது.

முதன்முதலாக, 1928-இல் அம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில், ஜெய்பால் சிங் தலைமையிலான இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்றது. அந்த தொடரில் இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் 15 கோல்களை குவித்திருந்த்தார்.

இதை தொடர்ந்து, 1956 வரை ஹாக்கி போட்டிகள் சேர்க்கப்பட்ட 6 ஒலிம்பிக் தொடர்களிலும், இந்தியா ஒரு அசைக்க முடியாதா சக்தியாகவே இருந்தது. 6 ஒலிம்பிக் தொடர்களிலும் இந்தியாவுக்கு தங்கப் பதக்கங்களே.

1928 ஒலிம்பிக்கில் காட்டிய அதே ஆதிக்கத்தை 1932 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிலும் தொடர்ந்த தயான் சந்த், அந்த தொடரிலும் தங்கத்தை வெல்ல உதவினார். அதை தொடர்ந்து, 1936 பெர்லின் ஒலிம்பிக் தொடரில் கேப்டனாக மீண்டும் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.

இதை தொடர்ந்து, 2-ஆம் உலகப்போருக்கு பின்னர் நடைபெற்ற 1948 லண்டன் ஒலிம்பிக் தொடரில், களத்தில் எதிரிகளை மட்டுமின்றி, களத்திற்கு வெளியே அரசியலையும் வீழ்த்தி, இந்தியாவுக்கு ஹாக்கியில் 4வது முறையாக தங்கத்தை வென்று கொடுத்தார், பல்பிர் சிங் சீனியர். அந்த தொடரில் அவர் 8 கோல்களை அடித்திருந்தார்.

அடுத்து நடைபெற்ற 1952 ஹெல்சின்கி ஒலிம்பிக் தொடரின் இறுதிப்போட்டியில், பல்பிர் சிங் ஒரு ஹாட்ரிக் உட்பட 5 கோல்களை குவித்து, மீண்டும் ஒரு தங்கப்பதக்கத்தை கைப்பற்றிக் கொடுத்தார்.

தொடர்ந்து 1956 மெல்போர்ன் ஒலிம்பிக் தொடரில், உத்தம் சிங்குடன் இணைந்து பல்பிர் சிங் மீண்டும் ஒரு தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

தொடர்ந்து 6 தங்கப்பதக்கங்களை வென்ற இந்தியா, 1960 ரோம் ஒலிம்பிக்கில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து தங்கப் பதக்கத்தை தவறவிட்டது. அந்த ஆண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

பின், மீண்டும் 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கத்தை கைப்பாற்றிய இந்தியா, 1968, 1972 ஒலிம்பிக் தொடர்களில் வெண்கலப் பதக்கங்களை வென்றது. பின் மீண்டும் 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்தியா மீண்டும் தங்கத்தை வென்றது.

அதை தொடர்ந்து, சுமார் 40 ஆண்டுகள் ஒலிம்பிக்கில் ஹாக்கியில் பதக்கமே வெல்லவில்லை என்ற தாக்கத்தை தான், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் மன்ப்ரீத் சிங் தலைமையிலான தீர்த்து வைத்தது.

இப்படியான நிலையில், ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, இந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் அந்த வெண்கல பதக்கத்தை தங்கப் பதக்கமாக மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த தொடரில், பெல்ஜியம், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, நியூசிலாந்து, அயர்லாந்து ஆகிய அணிகள் அடங்கிய ‘பி’ பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது.

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் அட்டவணை

ஜூலை 27 – vs நியூசிலாந்து
ஜூலை 29 – vs அர்ஜென்டினா
ஜூலை 30 – vs அயர்லாந்து
ஆகஸ்ட் 1 – vs பெல்ஜியம்
ஆகஸ்ட் 2 – vs ஆஸ்திரேலியா

2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேற உள்ளது.

இந்திய அணியின் விவரம்

ஹர்மன்ப்ரீத் சிங் (கேப்டன்), பி.ஆர்.ஸ்ரீஜேஷ் (கோல் கீப்பர்), ஜர்மன்ப்ரீத் சிங், அபிஷேக், மன்ப்ரீத் சிங், ஹர்திக் சிங், குர்ஜன்த் சிங், சஞ்சய், மந்தீப் சிங், லலித் உபாத்யாய், சுமித் வால்மிகி, ஷாம்ஷேர் சிங், ராஜ் குமார் பால், அமித் ரோஹிதாஸ், விவேக் பிரசாத், சுக்ஜீத் சிங்

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எம்.ஆர்.விக்கு உடந்தை… இன்ஸ்பெக்டருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு உறுதியளித்த ராம்தாஸ் அத்வாலே

ஸ்டாலின் தேர்வு செய்த புதிய உள்துறை செயலாளர்: யார் இந்த தீரஜ் குமார்?

குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்த ரம்பா : புகைப்பட தொகுப்பு இதோ!

Will India reassert its dominance in hockey?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share