பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 10மீ துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய கலப்பு இரட்டையர் பிரிவு தகுதிச்சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரானது நேற்று (ஜூலை 26) தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 206 நாடுகள் பங்கு பெறும் இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 117 வீரர்கள் களமிறங்குகின்றனர்.
இன்று (ஜூலை 27) நடைபெற்ற 10மீ துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய கலப்பு இரட்டையர் பிரிவில் ரமிதா – அர்ஜூன் பாபுடா ஜோடி 628.7 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்தனர். தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் – சந்தீப் சிங் ஜோடி 626.3 புள்ளிகளுடன் 12-ஆவது இடத்தைப் பிடித்தனர்.
இதில் ரமிதா – அர்ஜூன் பாபுடா ஜோடி ஒரு புள்ளி வித்தியாசத்தில் நூழிலையில் அடுத்தச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தனர்.
10மீ துப்பாக்கிச் சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனா முதலிடத்தையும், கொரியா இரண்டாவது இடத்தையும், கஜகஸ்தான் மூன்றாவது இடத்தையும் பிடித்து ஆதிக்கம் செலுத்தினர்.
பாய்மர படகுப்போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த பல்ராஜ் பன்வார் 7.07.11 மணி நேரத்தில் இலக்கை அடைந்து நான்காவது இடத்தைப் பிடித்தார். இதனால் அவர் நாளை (ஜூலை 28) நடைபெறும் repechage சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளார். இது இந்திய ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது.
செல்வம்
சாவர்க்கர் குறித்து பேச்சு… நெட்டிசன்கள் ட்ரோல்… வருத்தம் தெரிவித்த சுதா கொங்காரா
ஒரு மாநில முதல்வரை இப்படியா நடத்துவது? மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்!