2024 பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டு தொடரில் இந்தியா தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்து வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் பாரா பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் SU5 பிரிவில், தமிழ்நாட்டை சேர்ந்த 2 வீராங்கனைகள் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த பாராலிம்பிக் தொடரில், பாரா பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் SU5 பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த துளசிமதி, முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிலையில், அப்போட்டியில் வெற்றி பெற்ற துளசிமதி, தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மறுபுறத்தில், தோல்வியடைந்த மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடினார்.
இன்று இப்போட்டிகள் நடைபெற்றன. இறுதிப்போட்டியில், சீனாவை சேர்ந்த யாங் கியூஷியாவை எதிர்கொண்ட துளசிமதி முருகேசன், 17-21, 10-21 என நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
மறுபுறத்தில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், டென்மார்க்கை சேர்ந்த கேத்ரின் ரோசன்கிரென்னை எதிர்கொண்ட மனிஷா ராமதாஸ், 21-12, 21-8 என நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன்மூலம், பாரா பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் SU5 பிரிவில், வெள்ளி மற்றும் வெண்கலம் என 2 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
மேலும், இந்த பதக்கங்கள் மூலம், 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விவசாயிகளுக்கு குட் நியூஸ்: 14,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு… ஆனால்! – கண்டிஷன் போட்ட ஆர்.எஸ்.எஸ்