பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில், 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 18வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, டேவிட் வார்னர் (163 ரன்கள்) மற்றும் மிட்சல் மார்ஷ் (121 ரன்கள்) அதிரடியால், 50 ஓவர்கள் முடிவில் 367 ரன்கள் சேர்த்தது.
பின் இந்த இலக்கை எட்ட பாகிஸ்தான் அணி கடுமையாக போராடினாலும், 305 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்கள் பலர், பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர்.
போட்டியின் நடுவே, அவர்களில் சிலர் பாகிஸ்தான் அணியை ஊக்குவிக்கும் வகையில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என கோஷம் எழுப்பியுள்ளனர்.
அப்போது, அங்கு இருந்த காவலர்கள் சிலர், “பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பக்கூடாது”, என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம், தற்போது பெறும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலான வண்ணம் உள்ளது.
A Pakistan fan, who has come to watch the Pakistan vs Australia world cup game in Bengaluru is stopped by the cop from chanting "Pakistan zindabad".
What a shame. pic.twitter.com/4z8bJ3IRaF
— Korah Abraham (@thekorahabraham) October 20, 2023
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அந்த காணொளியில், காவல்துறை அதிகாரியிடம், “பாகிஸ்தான் விளையாடும் போட்டியில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷம் போடாமல், வேறு என்ன கோஷம் போட வேண்டும்?”, என அந்த பாகிஸ்தான் ரசிகர் கேள்வி எழுப்பும் காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும், அவரை மைதான நிர்வாகி ஒருவர் சமாதானப்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போட்டியில், பாக்., வீரர் முகமது ரிஸ்வானை நோக்கி ரசிகர்கள் சிலர் “ஜெய் ஶ்ரீ ராம்” என கோஷம் எழுப்பியது சர்ச்சையானது.
அப்போது, அதற்கு பாகிஸ்தான் அணியின் இயக்குநர் வருத்தம் தெரிவித்திருந்தார். பின், அந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி-யிடம் முறையிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
“துர்கா எந்த கோயிலுக்கு போறாங்கனு பார்க்கறதுதான் பாஜக வேலை” : ஸ்டாலின்