ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. இந்தத் தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது.
முதல் அரையிறுதி போட்டி பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்றது. இதில் 2-0 என்ற கணக்கில் சீனா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2-ஆவது அரையிறுதியில் தென்கொரியா அணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா வீழ்த்தியது.
இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சீனாவை ஒரு கோல் அடித்து வெற்றி பெற்று 5வது முறையாக சாம்பியன் ஆனது. 4வது குவார்ட்டர் பகுதியில் ஜக்ராஜ் சிங் அடித்த ஒரே கோலால் இந்திய அணி மற்றொரு வரலாற்று சாதனை படைத்தது. இந்த தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இறுதிப் போட்டியை காண பாகிஸ்தான் அணி வீரர்களும் மைதானத்துக்கு வந்திருந்தனர். அப்போது, அவர்களின் கையில் சீனாவின் தேசியக் கொடி இருந்தது. இத்தனைக்கும் அரையிறுதி போட்டியில் சீன அணியிடம் பாகிஸ்தான் தோற்றிருந்தது. அப்படியிருந்தும் சீன அணியின் கொடியுடன் பாகிஸ்தான் வீரர்கள் அமர்ந்திருந்தது விவாத பொருளாக மாறியது.
இதை பார்த்த நெட்டிசன்கள் … சாரி .. பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களே .. நீங்கள் யாருக்கு ஆதரவு என்று எங்களுக்கு தெரியும். ஆனால், இந்தியா 1- 0 என்று வெற்றி பெற்று விட்டது. இரண்டாவது முறையாக நாங்கள் கோப்பையை எங்கள் நாட்டுக்கு கொண்டு செல்கிறோம் என்று பதிலடி கொடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஜம்மு காஷ்மீர் வாக்குப்பதிவு: மதியம் 1 மணி நிலவரம் என்ன?
என்னா வெயில்… சூரியன் ஓய்வெடுக்குமா?: வானிலை அப்டேட்!
எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிராளிக்கு ரெண்டு கண்ணும் போகனும்னு சொல்ற மொமென்ட்…