ICC WorldCup: உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் இன்று (அக்டோபர் 23) பாகிஸ்தானை சந்திக்கிறது ஆப்கானிஸ்தான் அணி.
நடப்பு தொடரின் முதல் 2 லீக் ஆட்டங்களில் வெற்றி கண்ட பாகிஸ்தான் அணி, அதன்பின்னர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது.
இந்த தோல்விகளில் இருந்து மீண்டு, இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியுள்ளது.
சென்னை சேப்பாக்கில் கடைசியாக 2012ஆம் ஆண்டு விளையாடிய பாகிஸ்தான் அணி 11 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் களம் கண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மேலும், நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் மற்ற மைதானங்களில் பாகிஸ்தானுக்கு பெரும் ஆதரவு கிடைக்காத நிலையில், 1999ஆம் ஆண்டு இந்தியாவை வென்றபோது தங்களுக்கு கிடைத்த வழக்கமான ஆதரவை சேப்பாக்கில் பாகிஸ்தான் அணி இன்று பெறும் என எதிர்பார்க்கிறது.
ஆப்கானிஸ்தானை பொறுத்த வரையில், ஒரு வெற்றி, மூன்று தோல்விகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
புள்ளிப்பட்டியலில் மேலே எழும்பி வர வேண்டும் என்ற முனைப்புடன், இங்கிலாந்து கொடுத்த அதே அதிர்ச்சியை பாகிஸ்தானுக்கும் கொடுக்க தயாராகி உள்ளது ஆப்கானிஸ்தான்.
மேலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை சேப்பாக்கம் மைதானம் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இதற்கிடையே தற்போது தொடங்கியுள்ள போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
சலார் எமோஜி… 230 அடி கட் அவுட்: பிரபாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்!
நான்கு நாட்களில் ரூ.400 கோடி… பாக்ஸ் ஆபிஸில் ‘லியோ’ சாதனை!
நானி 31 பட டைட்டில் வெளியானது!
வங்கக்கடலில் உருவாகும் புயல்: 7 மாவட்டங்களுக்கு கனமழை!