சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இருந்து வெளியேற பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி , மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. ஆனால், இந்த தொடரில் பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய அணி மறுத்து வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ, இந்தியா வந்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறது. இந்தியா ஆடும் போட்டிகளை துபாய் போன்ற வெளிமண்ணில் வைக்கவும் பாகிஸ்தான் மறுக்கிறது.
இதனால், பல குழப்பங்கள் ஏற்படும் நிலையில், பாகிஸ்தானில் இருந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரை வேறு நாட்டுக்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முயன்று வருவதாக கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவை தேர்வு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி செய்தால் பாகிஸ்தான் இனி ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்க மாட்டோம் என்ற முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளது. உலகக்கோப்பை தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான வருவாய் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வருவாய் இழப்பு என்பது மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதால் பாகிஸ்தான் அதை ஒரு கருவியாக பயன்படுத்தி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை தங்கள் வழிக்கு கொண்டுவர முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. அதே வேளையில், ஐசிசி நடத்தும் போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை ஒரே பிரிவில் வைப்பது ஏன் ? என்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாஷித் அலி கேள்வி எழுப்பியுள்ளார்.
கிரிக்கெட்டுக்காக இங்கு யாரும் இல்லை. பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர், ஒரு அணிக்காக மற்ற அணிகளை பாதிப்படையை செய்வது எந்த விதத்தில் நியாயம்? இந்தியா குழந்தைத்தனமாக அடம் பிடிப்பதாகவும் சாடியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சிறுவனை கொன்ற இந்தியர்… சவுதி சிறையில் 18 ஆண்டுகள்… தாயாரை சந்தித்த தருணம்!
எடப்பாடி நீலிக் கண்ணீர் வடிக்கிறார் : திமுக குற்றச்சாட்டு!