ICC WorldCup: ஐசிசி உலகக்கோப்பை தொடரில் 24 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வரலாற்றை மாற்றியுள்ளது தென்னாப்பிரிக்கா அணி.
உலகக் கோப்பை ஒருநாள் தொடரின் 26வது லீக் போட்டி பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று (அக்டோபர் 27) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
நடப்பு தொடரில் இங்கு நடைபெறும் கடைசி போட்டி என்பதால் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதே மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி கண்டிருந்த பாகிஸ்தான், அரையிறுதிக்கு செல்ல வேண்டுமென்றால் தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. வழக்கம்போல தொடக்க வீரர்கள் சொதப்பினாலும், கேப்டன் பாபர் அசாம்(50) மற்றும் ஷகீலின்(52) பொறுப்பான அரைசதத்தால் 250 ரன்களை கடந்தது.
இதற்கிடையே தென்னாப்பிரிக்கா வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
தென்னாப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஷம்சி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்கோ ஜான்சன் 3 ஜெரால்ட் கோட்ஸி 2, லுங்கி இங்கிடி 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 47.2வது ஓவர்களில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
Whole Chennai Crowd Shouting after #SouthAfrica Defeat #Pakistan in a Very Interesting Match…#SAvsPAK #BabarAzamIsMyCaptian#PAKvsSA #BabarAzam #ICCCricketWorldCup23#PAKvSA #PakVsRSA #virat #RohitSharma𓃵 #INDvsENG #1989TaylorsVersion#IsraeliNewNazismhttps://t.co/qUTh7gUwft
— Md Husnain (@mdrj007) October 28, 2023
கடைசி நேரத்தில் பாகிஸ்தான் பவுலர்கள் மிரட்டிய நிலையில், கேசவ் மகராஜ் மற்றும் ஷம்சி ஆகியோர் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
இதன்மூலம் தென்னாப்பிரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்ற நிலையில், பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
மேலும் 24 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பாகிஸ்தான் அணியை ஐசிசி உலகக்கோப்பை தொடரில் வீழ்த்தியுள்ளது தென்னாப்பிரிக்கா அணி.
போட்டிக்கு பின்னர் இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், “கடைசி வரை வெற்றிக்காக போராடினோம். ஆனால் முடிவு ஏமாற்றமளிக்கிறது. பேட்டிங்கில் 20 ரன்கள் குறைவாக எடுத்துள்ளோம்.
இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று, தொடரில் இன்னும் உயிர்ப்போடு இருக்கவே விரும்பினோம். துரதிர்ஷ்டவசமாக அதை நாங்கள் தவறவிட்டுவிட்டோம்.
மீதம் இருக்கும் 3 போட்டிகளில் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து பாகிஸ்தானுக்காக விளையாடுவோம். அதன் பிறகு எங்கு நிற்கப் போகிறோம் என்று பார்ப்போம்” என்று அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வந்தே பாரத் ரயில்கள்: வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் – ஐ.சி.எஃப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
பதற்றம் வரும்போது என்ன செய்ய வேண்டும்?