பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி சென்றால்… கொந்தளித்த பிசிசிஐ

Published On:

| By Kumaresan M

ஐ.சி.சி. சாம்பியன் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானிலுள்ள 3 நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய அணி ஏற்கனவே மறுத்துவிட்டது.. துபாய் போன்ற பொது இடங்களில் இந்தியா விளையாடும் ஆட்டங்கள் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில், ‘பாகிஸ்தானே தயாராக இரு… ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி நவம்பர்16 ஆம் தேதி முதல் இஸ்லாமாபாத்தில் இருந்து பாகிஸ்தான் முழுவதும் எடுத்து செல்லப்படுகிறது. முஷாராபாத் நகருக்கும் ஐசிசி கோப்பை வருகிறது ‘என்று குறிப்பிட்டிருந்தது.

இதில், முஷாராபாத் என்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரம் ஆகும். ஏற்கனவே, தீவிரவாத பிரச்னையால்தான் இந்திய விளையாட்டு அணிகள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்கின்றன. இதற்கிடையே,  ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு எடுத்து செல்ல பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தற்போது பிசிசிஐ செயலாளராகவுள்ள ஜெய் ஷா இது குறித்து ஐ.சி.சி. யின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் கூறுகையில், ‘பாகிஸ்தான் நாட்டுக்குள் எந்த நகரத்துக்கும் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கொண்டு செல்லக் கூடாது. அது சர்ச்சைக்குரிய பகுதியாகும்.  அதற்கு வெளியேவுள்ள மைதானம் அல்லது மால் பகுதியில் கோப்பையை மக்கள் பார்வைக்கு வைக்கலாம் ‘ என்று கூறுகின்றனர்.

ஆனால், இந்தியாவின் எதிர்ப்பு குறித்து ஐசிசி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. தற்போது பிசிசிஐ செயலாளராகவுள்ள ஜெய் ஷா, வரும் டிசம்பர் 1 ஆம் தேதி ஐசிசி தலைவராகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

மைக் டைசன் அவுட்: ஒரு டிக்கெட் விலை 17 கோடி!

உத்தரபிரதேச மருத்துவமனையில் தீ விபத்து… 10 பச்சிளம் குழந்தைகள் பலியான சோகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share