ICC Worldcup: சண்டை செய்யாமல் பாகிஸ்தான் சரண்… ஆஸ்திரேலியா அபாரம்!

Published On:

| By christopher

Pakistan dismissed from cwc

இந்தியாவில் நடந்து வரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. Pakistan dismissed from cwc

லீக் போட்டிகள் அனைத்தும் இன்றுடன் முடிவடையும் நிலையில், நேற்று (நவம்பர் 12) இரண்டு போட்டிகள் நடைபெற்றன.

மிட்செல் மார்ஷ் அதிரடி!

AUSvsBAN: புனே மைதானத்தில் காலை 9 மணிக்கு தொடங்கிய போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலியாவும், வங்கதேச அணியும் மோதின.

Pakistan dismissed from cwc

இதில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டோவிட் ஹெரிடோய் 74 ரன்கள் அடித்தார்.

தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 44.4 ஓவரில் 307 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Pakistan dismissed from cwc

17 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களுடன் 177 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டிய மிட்செல் மார்ஷல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

சாம்பியின் டிராபிக்கு தகுதி!

PAKvsENG: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்காக கடைசி வாய்ப்பில் பாகிஸ்தான் அணியும், கெளரவ வெற்றிக்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து வெற்றி இலக்கான 338 ரன்களை 6.4 ஓவரில் எட்டினால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கியது.

6.4 ஓவர்களில் தொடர்ச்சியாக 40 சிக்ஸர்களை அடித்தால் கூட, பாகிஸ்தான் இலக்கை எட்டமுடியாது என்ற நிலையில், தொடக்க வீரர்களான அப்துல்லா ஷபீக்(0) மற்றும் பக்கர் சமான்(1) ஆகியோர் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, பாகிஸ்தான் அணி 43.4 ஓவரில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இங்கிலாந்து அணியிடம் சண்டையின்றி சரணடைந்தது.

Pakistan dismissed from cwc

பாகிஸ்தான் அணியில் அகா சல்மான்(51) தவிர கேப்டன் பாபர் அசாம், ரிஸ்வான் உள்ளிட்ட மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு சாம்பியன் என்ற கெளரவத்துடன் தொடரில் களம் கண்ட இங்கிலாந்து அணி, கடைசி போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்து,  2025 இல் பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. Pakistan dismissed from cwc

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மாதவிடாய் காலங்களில் வயிற்றுவலியால் கஷ்டப்படுறீங்களா?: இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

‘அம்மா மினி கிளினிக்’ திட்டம் முடிந்து விட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment