ENGvsPAK: எதிரிக்கும் இந்த நிலைமை வரக்கூடாது என்ற கடும் நெருக்கடிக்கு இடையே களமிறங்கியது பாகிஸ்தான் அணி. எனினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பந்துவீசி வரும் அந்த அணி தொடரில் இருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது. Pakistan eliminated from ICC world cup
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (நவம்பர் 11) மதியம் 2 மணிக்கு தொடங்கிய போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாடி வருகின்றன.
பட்லர் கொடுத்த ஷாக்!
போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அப்போதே பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு 50 சதவீதமாக குறைந்துவிட்டது.
ஏனெனில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து இங்கிலாந்து அணியை 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு ரன்ரேட் அடிப்படையில் தகுதிப்பெற்றுவிடும் என்ற சூழ்நிலை நிலவியது.
இதற்கு சிறிது வாய்ப்பிருந்ததால், பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால் டாஸ் வென்று இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்துள்ளார்.
நூழிலை வாய்ப்பும் பறிபோனது!
இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தாலும் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு நூழிலையில் தொங்கி கொண்டிருந்தது.
அதாவது இங்கிலாந்து அணி 50 ரன்கள் சேர்த்தால், அதனை பாகிஸ்தான் அணி 2 ஓவர்களிலும், 100 ரன்கள் அடித்தால், 2.5 ஓவர்களிலும், 200 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தால், 4.3 ஓவர்களிலும், 300 ரன்கள் குவித்தால், 6.1 ஓவர்களிலும் சேஸ் செய்ய வேண்டும் என்ற நெருக்கடியான நிலை இருந்தது.
அதாவது பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைய வேண்டும் என்றால் கட்டாயம் இங்கிலாந்து அணியை 50 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வாய்ப்பே இல்லை என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் தற்போது முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி 38 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களை குவித்து விளையாடி வருகிறது.
வாய்ப்பில்ல ராஜா!
தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து அணி பவுலர்கள் ஓவருக்கு 2 நோ பால் பந்துகள் என்று போட்டுக்கொடுத்தாலும் பாகிஸ்தானுக்கு வாய்ப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக் போட்டியின் மூலம் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பிருந்த நிலையில், தற்போது பேட்டிங் செய்யாமலே அந்த அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது.
இதன்மூலம் நடப்பு உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டிக்கு முறையே இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் டாப் 4 அணிகளாக தகுதி பெற்றுள்ளன. Pakistan eliminated from ICC world cup
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கேம் ஓவர்: பிக்பாஸ் ரீ-எண்ட்ரி குறித்து… ட்வீட் செய்த பிரதீப்!
சிறையில் காவல்துறையினர் என்னை மிரட்டினர்: அமர்பிரசாத் ரெட்டி