Pakistan and Newzealand team celebrates Australia victory

ஆஸ்திரேலியா வெற்றி: கொண்டாடும் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள்!

விளையாட்டு

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், 39வது லீக் போட்டியில், ஒரு மிக முக்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. Pakistan and Newzealand team celebrates Australia victory

இந்த போட்டியில் வெற்றி பெற்றால், அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும் என்ற நிலையில், ஆஸ்திரேலியா களம் கண்டது.

துவக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியாவுக்கு எதுவும் சாதகமாக அமையவில்லை. முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 291 ரன்கள் குவித்திருந்தது. இப்ராஹிம் ஜத்ரான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 129 ரன்கள் விளாசியிருந்தார்.

Maxwell's miracle in Mumbai seals extraordinary win | cricket.com.au

இதை தொடர்ந்து நவீன் உல் ஹக் மற்றும் அஸ்மதுல்லா ஓமர்சாய் ஆகியோரின் ஸ்விங், ரஷீத் கானின் சுழல் ஆகியவற்றில் சிக்கி, ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது.

ஆனால், அடுத்து வந்த கிளென் மெக்ஸ்வெல், சிங்கிள் ஓட முடியாது, பெரிதாக நகர்ந்து விளையாட முடியாது என்ற நிலையிலும், ஒற்றை ஆளாக நின்று, 128 பந்துகளில் 201 ரன்கள் விளாசி ஆப்கான் அணியை வீழ்த்தியுள்ளார்.

3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு அடுத்து 3வது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

Pakistan and Newzealand team celebrates Australia victory

பிற அணிகளின் நிலை என்ன?

தற்போது வரை, இலங்கை, வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி ரேஸில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு இடத்திற்காக, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் போட்டிபோட்டு வருகின்றன.

ஆப்கானிஸ்தான் அணியின் தோல்வி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளின் அரையிறுதி வாய்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது.

Pakistan and Newzealand team celebrates Australia victory

புள்ளிப்பட்டியலில் தலா 8 புள்ளிகளுடன் உள்ள பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு, இன்னும் தலா ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது.

இதன் காரணமாக, அரையிறுதிக்கு செல்ல ஒவ்வொரு அணியும் தனது போட்டியில் வென்றாக வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும், அப்படி வென்றாலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி, மற்றும் ரன்-ரேட் ஆகியவற்றை எல்லாம் கொன்டே ஒரு அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும். இதனால் நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தற்போது மிக சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது.

Pakistan and Newzealand team celebrates Australia victory

நெதர்லாந்து அணிக்கும் வாய்ப்புள்ளது!

4 புள்ளிகளுடன் உள்ள நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிரான தனது அடுத்த 2 போட்டிகளில் அபார வெற்றி பெற வேண்டும்.

அதை தொடர்ந்து, ஒருவேளை பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தங்களது கடைசி போட்டியில் தோல்வியடைந்தால், ரன்-ரேட் அடிப்படையில் நெதர்லாந்து அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. Pakistan and Newzealand team celebrates Australia victory

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

முரளி

5 மாவட்டங்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

போர் கண்ட சிங்கமாய் மேக்ஸ்வெல்… ஆஸ்திரேலியாவின் மறக்கமுடியாத வெற்றி!

சென்னையில் என்.ஐ.ஏ சோதனை: 3 பேர் கைது!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *