பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதும் சூப்பர் 4 கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 3 மணிக்கு துவங்க வேண்டிய நிலையில் மழை காரணமாக போட்டி இன்னும் துவங்காமல் உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்தியாவுடன் இறுதி போட்டியில் விளையாட உள்ளது. இதனால் இன்றைய போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்று மழை காரணமாக தடைப்பட்டால் ரிசர்வ் டே இன்னும் அறிவிக்கப்படவில்லை. மழை காரணமாக போட்டி தடைப்பட்டால் இரண்டு அணிகளுக்கும் சரிசமமாக பாயிண்டுகள் பகிர்ந்தளிக்கப்படும்.
இலங்கை அணி பாகிஸ்தானை விட அதிக ரன் ரேட் கொண்டிப்பதால் இறுதிப்போட்டிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வி அடைந்தது தான்.
ஒருவேளை மழை குறுக்கீடு குறைந்து 20 ஓவராக குறைக்கப்பட்டால் பாகிஸ்தான் அணி போட்டியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
செல்வம்
பொன்முடி வழக்கிலிருந்து விலக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுப்பு!