கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா மாஸ்டர்ஸ் காலிறுதிப்போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இந்திய பேட்மிண்டன் வீரர்கள் அவர்களது முழு திறனையும் வெளிப்படுத்தி அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி வருகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அயா ஓஹோரியை 21-16, 21-11 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
தொடர்ந்து இன்று (மே 26) நடைபெற்ற காலிறுதி போட்டியில் சீனாவின் ஜாங் யி மானை எதிர்கொண்டார். இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களுக்குச் சொந்தக்காரரான பி.வி.சிந்து 1.14 மணி நேரத்தில் 21-16, 13-21, 22-20 என்ற கணக்கில் சீன வீராங்கனையை தோற்கடித்தார்.
தொடர்ந்து நாளை (மே 27) நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் கிரிகொரியா நாட்டு வீராங்கனை மர்ஸ்கா துன் ஜங்கை எதிர்கொள்கிறார்.
அடுத்த ஆண்டு பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான ஒரு பகுதியாக மலேசியா மாஸ்டர்ஸ் இருப்பதால் அரையிறுதியில் வென்று சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அடுத்ததாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ். பிரணாய் ஜப்பான் வீரர் கெண்டா உடன் விளையாடி வருகிறார்.
மோனிஷா
செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு: திமுகவினர் கடும் எதிர்ப்பு!
45 ஆயிரத்திற்குக் கீழ் சென்றது தங்கம் விலை!