‘விராட் கோலியை மட்டும் தக்க வைத்துவிட்டு, மற்ற வீரர்களை விடுவித்து விடுங்கள்’ என ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஆர்.சி.பி அணிக்கு வெளிப்படையாக ஆலோசனை கூறியுள்ளார் ஆர்பி சிங்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான ஆர்.பி.சிங் 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வென்ற வீரர் ஆவார். மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள அவர், டெக்கான் சார்ஜர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
ஐபிஎல் இரண்டாவது சீசனில் அவர் 16 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி, பர்பில் தொப்பியை வென்றிருந்தார். அவரது அபார பந்துவீச்சு டெக்கான் டெக்கான் சார்ஜர்ஸ் அணி அந்த தொடரில் கோப்பையை வென்றது.
கடந்த 2018ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற ஆர்.பி.சிங், தற்போது பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அடுத்தாண்டு ஐபில் தொடருக்கான மெகா ஏலம் நடைபெறுவதை முன்னிட்டு அவர் விளையாடிய பெங்களூரு அணிக்கு ஆலோசனை அளித்துள்ளார்.
அவர், ”ஆர்சிபி அணி என்னைப் பொறுத்தவரை விராட் கோலியை தவிர மற்ற அனைவரையும் விடுவிக்க வேண்டும். சிராஜ், படிதார் போன்ற வீரர்கள் தேவை என்றால் ஆர்.டி.எம் பயன்படுத்தி எடுத்துக்கொள்ளலாம்.
கோலி ஆர்.சி.பி அணிக்காக நிறைய பங்களிப்பை அளித்துள்ளார். எனவே அவரை சுற்றியே அணியை கட்டமைக்க வேண்டும் அல்லது புதிய சிந்தனையுடன் ஏலத்திற்கு செல்ல வேண்டும்.
விராட் கோலியை தவிர மற்ற வீரர்களின் மதிப்பு ரூ.18, ரூ.14 கோடியாக இருப்பதை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை” என ஆர்பி சிங் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சர்வதேச அங்கீகாரம் பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ்
அரசுப் பள்ளியில் 10 டன் புத்தகங்கள் இருந்த இடத்தில் தீ!