4 வீரர்களில் ஒருவர் தான் ஆரஞ்சு தொப்பி வெல்வார்: சேவாக்

விளையாட்டு

ஐபிஎல் போட்டியின் 16 வது சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி ரசிகர்களின் ஆதரவுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோப்பையை வெல்லும் முனைப்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் களமிறங்க உள்ளன.

பொதுவாகவே ஐபிஎல் தொடரில் கோப்பைக்கு அடுத்தபடியாக அதிரடியாக விளையாடி தங்களது அணிக்கு பெரிய ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு நிலவுவது வழக்கமாகும்.

இந்நிலையில், இந்த சீசனில் ருதுராஜ் கைக்வாட், கேஎல் ராகுல், விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா ஆகியோரில் யாராவது ஒருவர் ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் அளித்த பேட்டியில், “ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் ஒன், கேஎல் ராகுல் நம்பர் 2, 3வது வீரரை டாஸ் போட்டு பார்க்கும் போது விராட் கோலி அல்லது ரோகித் சர்மாவாக இருப்பார்கள்” என்று கூறினார். அத்துடன் சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ் 3வது அல்லது 4வது இடத்தில் விளையாடினால் கச்சிதமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவர்களுடன் சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் போன்ற இளம் இந்திய வீரர்களும் ஆரஞ்சு தொப்பிக்கு போட்டி போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மதுரை மாநகராட்சி குறித்து செல்லூர் ராஜூ புகார்!

கேரளா ரயில் தீ விபத்து: குற்றவாளி கைது!

+1
1
+1
6
+1
1
+1
13
+1
1
+1
6
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *