3வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு 220 ரன்கள் இலக்கு!

விளையாட்டு

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஷிகார் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 2வது ஆட்டத்தில் 12.5 ஓவர்கள் மட்டுமே பந்துவீசப்பட்ட நிலையில் மழையால் பாதியில் ரத்தானது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் ஸ்டேடியத்தில் இன்று (நவம்பர் 30) நடைபெற்று வருகிறது.

3வது ஒருநாள் போட்டி

oneday cricket india team batting

அதன்படி இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க பேட்டர்களாக கேப்டன் தவானும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். சுப்மான் கில் 13 ரன்களில் வெளியேற, தவான் 28 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மட்டும் பொறுப்புணர்ந்து விளையாட, மற்றவர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். ஸ்ரேயாஸ் 49 ரன்கள் எடுத்தார்.

220 ரன்கள் இலக்கு

வாஷிங்டன் சுந்தர் 51 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி, 47.3 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் மிட்செல் மற்றும் மில்னே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். திம் செளதி 2 விக்கெட்களை எடுத்தார்.

இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. தற்போது வரை அந்த அணி 12.2 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்துள்ளது.

அவ்வணியில் ஃபின் அலேன் 41 பந்துகளுக்கு 41 ரன்களும், தேவன் கான்வே 35 பந்துகளுக்கு 27 ரன்களும் எடுத்து தொடர்ந்து ஆடி வருகின்றனர்.

ஜெ.பிரகாஷ்

ஏர்போர்ட் மல்டிலெவல் பார்க்கிங் டிச. 4 ல் திறப்பு: புதிய கட்டணத்தால் அதிர்ச்சி!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ராமதாஸ் வலியுறுத்தல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.