உடல் நலம் குணமடைந்து வருவது குறித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் இன்று (பிப்ரவரி 10 ) ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.
இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி கார் விபத்துக்குள்ளாகி படுகாயத்திற்கு ஆளானார்.
டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.
படுகாயமடைந்த ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சை பெற்றார்.
பின்னர் சில நாள்களில் உயர் சிகிச்சைக்காக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரிஷப் பண்ட்டிற்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது உடல் நலம் தேறி வரும் ரிஷப் பண்ட், ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இன்று (பிப்ரவரி 10 ) வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “ ஒரு படி முன்னே… ஒரு படி வலிமையாக…ஒரு படி மேன்மையாக…” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்து அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து செய்திகளை பதிவிட்டு வருகின்றனர். குறைந்தது 6 மாத காலமாவது ரிஷப் பண்டுக்கு ஓய்வு தேவைப்படும் என கருதப்படும் நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் நிச்சயம் விளையாட மாட்டார்.
அதேபோல, அக்டோபர்-நவம்பரில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிகளிலும் அவர் பங்கேற்பது சந்தேகமே என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சமந்தாவின் ‘சாகுந்தலம்’: ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!
பிச்சைக்காரன் 2 : ஸ்னீக் பீக் ட்ரெய்லர் வெளியீடு!