செஸ் ஒலிம்பியாட்: நிறைவு விழா மேடையில் உதயநிதி

விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்டில் சிறந்த சீருடை அணிந்த அணிகளுக்கான விருதை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிறைவு பெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஃபிடே அமைப்பின் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் சிறந்த அணிகளுக்கு விருது மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறந்த அணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த சீருடை அணிந்த அணிகளுக்கான விருதை அங்கோலா, ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் பெற்றன.

இந்த விருதுகளை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒருங்கிணைப்புக் குழுவில் உதயநிதியும் ஓர் உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர் இந்த விருதுகளை வழங்கியிருக்கிறார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்களுக்கான சிறந்த சீருடை விருது மங்கோலியா, உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கும், சிறந்த மகளிர் அணி சீருடைக்கான விருது உகாண்டா நாட்டு அணிக்கும் சிறந்த ஸ்டைலிஷ் அணி விருது டென்மார்க் அணிக்கும் வழங்கப்பட்டது.

ஜெ.பிரகாஷ்

பாலம் முதல் பால் பாக்கெட் வரை செஸ் தான்: விஸ்வநாதன் ஆனந்த்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.