குட்டி ‘கோலி’யை வரவேற்ற விராட்-அனுஷ்கா… பேரே வச்சாச்சு!

Published On:

| By Manjula

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதியர் தங்களுக்கு மகன் பிறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மொத்தமாக விலகியதன் காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. தங்களுக்கு மகன் பிறந்துள்ளதாகவும் பையனுக்கு ‘ஆகாய்’ என பெயர் சூட்டி இருப்பதாகவும் அனுஷ்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ”மிகவும் மகிழ்ச்சியுடனும், எங்கள் இதயங்களின் அன்புடனும் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது என அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் ஆண் குழந்தைக்கு ‘ஆகாய்’ என பெயர் சூட்டி, வாமிகாவின் குட்டி சகோதரனை இந்த உலகிற்கு வரவேற்கிறோம்!

எங்கள் வாழ்வின் இந்த அழகான நேரத்தில் உங்கள் ஆசிகளையும், நல்வாழ்த்துகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த நேரத்தில் எங்களது தனியுரிமையை மதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். அன்பு மற்றும் நன்றிகளுடன் விராட் & அனுஷ்கா,” என பதிவிட்டு இருக்கிறார்.

இதைப்பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் விராட்-அனுஷ்கா தம்பதியருக்கு தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தனுஷின் ‘ராயன்’ அஜித்திற்காக எழுதப்பட்ட ரத்த சரித்திரமா?

நெருக்கடி நிலையில் தமிழ்நாட்டின் கடன்! பட்ஜெட்டில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share