ODI World Cup 2023: மூன்றாவது முறையாக சாதிக்குமா இந்தியா?
உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர், இந்தியாவில் இன்று துவங்கவுள்ளது.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதிக்கொள்ளவுள்ளன.
இந்த போட்டியில், காயம் காரணமாக, நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சவுதி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வரும் அக்டோபர் 8 அன்று, இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி நடைபெறவுள்ளது.
கடந்த 3 உலகக்கோப்பை தொடர்களையும், போட்டிகளை நடத்திய நாடுகளே கைப்பற்றிய நிலையில், இம்முறை இந்தியா மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில், முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்டோர் சிறப்பான ஃபார்மில் உள்ளதும் அதற்கு மற்றொரு காரணம்.
இப்படியான 100 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் கனவுகளை, இந்த இந்திய அணி நனவாக்குமா?
இந்திய அணியின் விவரம்:
ரோகித் சர்மா (c), ஹர்திக் பாண்டியா (vc), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷ்ரதுல் தாகூர், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ்
இந்திய அணிக்கான போட்டிகள் எப்போது?
அக்டோபர் 8 – இந்தியா vs ஆஸ்திரேலியா – சென்னை
அக்டோபர் 11 – இந்தியா vs ஆப்கானிஸ்தான் – டெல்லி
அக்டோபர் 14 – இந்தியா vs பாகிஸ்தான் – அகமதாபாத்
அக்டோபர் 19 – இந்தியா vs வங்கதேசம் – புனே
அக்டோபர் 22 – இந்தியா vs நியூசிலாந்து – தர்மசாலா
அக்டோபர் 29 – இந்தியா vs இங்கிலாந்து – லக்னோ
நவம்பர் 2 – இந்தியா vs இலங்கை – மும்பை
நவம்பர் 5 – இந்தியா vs தென் ஆப்ரிக்கா – கொல்கத்தா
நவம்பர் 12 – இந்தியா vs நெதர்லாந்து – பெங்களூரு
நாக் – அவுட் சுற்று ஆட்டங்கள் எப்போது?
நவம்பர் 15 – முதல் அரையிறுதி – மும்பை
நவம்பர் 16 – 2ஆம் அரையிறுதி – கொல்கத்தா
நவம்பர் 19 – இறுதிப்போட்டி – அகமதாபாத்
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆட்டோ மொபைல்: 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி சாத்தியமா?
ஐடி சோதனை: பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அனுமதி மறுப்பு!
சாதிக்கு சாட்டையடி கொடுத்த முன்னோடி… யார் இந்த வள்ளலார்?
கிடப்பில் போடப்படும் கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம்!