விராட் கோலியின் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீராங்கனை!

Published On:

| By Monisha

Suzie Bates beats Virat Kohli's record

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, அந்த நாட்டு மகளிர் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடியது. இதில், ஒருநாள் தொடரை 2-1 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றிய நிலையில், டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்துள்ளது. இந்த தொடரில், முதல் 3 போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த டி20 தொடரின் கடைசி லீக் போட்டியில், நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடி 45 ரன்கள் சேர்த்த சூசி பேட்ஸ், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதுவரை, 149 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சூசி பேட்ஸ், 26 அரைசதங்கள் மற்றும் 1 சதத்துடன் 4,021 ரன்களை சேர்த்துள்ளார். இவரின் சராசரி 29.78 ஆக உள்ளது.

முன்னதாக, 115 போட்டிகளில் விளையாடி 4,008 ரன்கள் குவித்திருந்த விராட் கோலி, இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

மேலும், இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 4,000 ரன்களை கடந்த 2வது நபர் என்ற பெருமையையும் சூசி பேட்ஸ் பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில், சூசி பேட்ஸ் மற்றும் விராட் கோலிக்கு அடுத்து, 3,853 ரன்களுடன் ரோகித் சர்மா 3வது இடத்திலும், 3,531 ரன்களுடன் மார்ட்டின் கப்டில் 4வது இடத்திலும், 3,485 ரங்களுடன் பாபர் அசாம் 5வது இடத்திலும் உள்ளனர்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் சேர்த்த நபர்கள் பட்டியல்

சூசி பேட்ஸ் – 4,021 ரன்கள்
விராட் கோலி – 4,008 ரன்கள்
ரோகித் சர்மா – 3,853 ரன்கள்
மார்ட்டின் கப்டில் – 3,531 ரன்கள்
பாபர் அசாம் – 3,485 ரன்கள்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் சேர்த்த வீராங்கனைகள் பட்டியல்

சூசி பேட்ஸ் – 4,021 ரன்கள்
மெக் லேனிங் – 3,405 ரன்கள்
ஸ்டெபானி டெய்லர் – 3,236 ரன்கள்
ஹர்மன்ப்ரீத் கவுர் – 3,154 ரன்கள்
சோஃபி டிவைன் – 3,091 ரன்கள்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்….

முரளி

சிவகார்த்திகேயன் செய்தது மிகப்பெரிய துரோகம்: டி. இமான் குற்றச்சாட்டு!

வேலைவாய்ப்பு: இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share